விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தின் 34-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதயமானது... முதல்வர் துவக்கி வைத்து பேச்சு

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகத்தின் 34-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதயமானது

    கள்ளக்குறிச்சி: தமிழகத்தின் 34-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி இன்று உதயமானது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய மாவட்டத்தை துவக்கி வைத்து அரசின் சாதனைகள் பற்றி பேசினார்.

    மேலும், மக்களுக்காக பார்த்து பார்த்து நலத்திட்டங்களை தனது தலைமையிலான அரசு கொண்டு வருவதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.

    இதனிடையே, இந்த விழாவில் பேசிய துணை முதல்வர் ஓ.பி.எஸ்., அரசு மீது ஏதாவது ஒரு குறையைக் கூறி எப்படியாவது ஆட்சியை பிடித்துவிடலாம் என திமுக நினைப்பதாக சாடினார்.

    பதவி ஆசையால் தேனிக்கு சென்றேன்... ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேச்சுபதவி ஆசையால் தேனிக்கு சென்றேன்... ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேச்சு

    விழுப்புரம் பிரிப்பு

    விழுப்புரம் பிரிப்பு

    விழுப்புரம் மாவட்டத்தை 2-ஆக பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் செயல்படும் என அண்மையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதையடுத்து புதிய மாவட்டத்தை தனியாக இயங்க வைப்பதற்கான பணிகள் விரைந்து முடிக்கப்பட்டன. இந்நிலையில் இன்று கள்ளக்குறிச்சியை 34-வது புதிய மாவட்டமாக முதல்வர் துவக்கி வைத்தார்.

    573 வருவாய் கிராமங்கள்

    573 வருவாய் கிராமங்கள்

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5 சட்டமன்றத் தொகுதிகள், ஒரு நாடாளுமன்றத் தொகுதி, 6 வருவாய் வட்டங்கள், 2 வருவாய் கோட்டங்கள், 573 வருவாய் கிராமங்கள் அடங்கியுள்ளன. நிர்வாக வசதிக்காக மேற்கண்டவாறு வருவாய் அமைப்புகள் பிரிக்கப்பட்டுள்ளன.

    முதல்வர் கேள்வி

    முதல்வர் கேள்வி

    தமிழக அரசை பற்றி செல்லுமிடமெல்லாம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொய்யுரைத்து வருவதாகவும், திமுக ஆட்சியில் இருந்த போது ஏழை எளிய மக்களுக்கு அவர்கள் என்ன செய்தார்கள் என்றும் கேள்வி எழுப்பியதோடு கடுமையாக விமர்சிக்கவும் செய்தார்.

    நலத்திட்டங்கள்

    நலத்திட்டங்கள்

    மக்களுக்காக தமிழக அரசு பார்த்து பார்த்து பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வந்து நன்மை செய்வதாகவும், சமூக நீதிக்கு ஒரு ஆபத்து என்றால் அதிமுகதான் குரல் கொடுப்பதாகவும் முதலமைச்சர் பேசினார்.

    திமுக மீது சாடல்

    திமுக மீது சாடல்

    இதனிடையே இந்த விழாவில் பேசிய துணை முதல்வர் ஓ.பி.எஸ்., அரசு மீது ஏதாவது ஒரு குறையைக் கூறி எப்படியாவது ஆட்சியை பிடித்துவிடலாம் என திமுக நினைப்பதாக சாடினார். மேலும், கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட தொடக்க விழாவில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றிருந்தனர்.

    English summary
    today onwards kallakurichi is the 34th district of Tamil Nadu
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X