விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் முதல்முறை.. மக்களுக்கு உதவ செம ஐடியா.. ஆண்டிராய்டு செயலியை வெளியிட்ட ரவிக்குமார் எம்பி

Google Oneindia Tamil News

விழுப்புரம்: தமிழகத்தில் முதல் முறையாக, விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் புதிய ஆண்டிராய்டு செயலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றிபெற்றது. புதுச்சேரி உட்பட 40 இடங்களில் 39 இடங்களில் திமுக கூட்டணி வென்றது. விழுப்புரம் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் மூத்த உறுப்பினர் ரவிக்குமார் வெற்றிபெற்று எம்பியாக தேர்வானார்.

VCK MP Ravikumar releases an android app to connect with people

இந்த நிலையில், தமிழகத்தில் முதல் முறையாக, விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் புதிய ஆண்டிராய்டு செயலி ஒன்றை வெளியிட்டுள்ளார். மக்கள் நேரடியாக தங்களது பிரச்சினைகளை எடுத்துச்செல்ல வசதியாக இந்த செயலியை அறிமுகம் செய்துள்ளார்.

விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்பு இந்த செயலியை உருவாக்கியுள்ளது. மக்கள் எளிதாக தொடர்பு கொள்ள வசதியாகவும், புகார்களை தெரிவிக்க வசதியாகவும், தங்கள் தொகுதி எம்பி உடன் எந்நேரமும் தொடர்பில் இருக்க வசதியாகவும் இந்த மென்பொருள் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

தொழிற்நுட்ப வளர்ச்சி விண்ணை தொட்டுள்ள இந்த காலக்கட்டத்தில் இது போன்ற எளிமையான நேரடி தொடர்பு மிக அவசியமானது. வரும் ஞாயிற்றுகிழமை விழுப்புரத்தில் இந்த செயலி அறிமுக விழா நடக்கவுள்ளது. .

இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இப்போதே https://play.google.com/store/apps/details?id=com.mp.ravikumar&fbclid=IwAR1qPdJm1vo1TKx0NicUEl4mTwko5A5V00WMntOnU3Iku6faunopt6IItFY என்ற வாக்கியத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதேபோல் ரவிக்குமார் தனக்கு என்று இணைய தள பக்கம் தொடங்கி அதன் மூலமும் மக்களிடம் புகார்களை பெற்று வருகிறார். தமிழகத்தில் முதல்முறையாக இப்படி ஒரு எம்பி தனக்காக ஆண்ட்ராய்டு செயலியை உருவாக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
VCK MP Ravikumar releases an android app to connect with people Villupuram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X