விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கேப்டன் ரிடர்ன்ஸ்.. சென்னையில் 2 நாட்கள் விஜயகாந்த் பிரசாரம்.. அனல் பறக்குமா?

Google Oneindia Tamil News

Recommended Video

    Vijayakanth Election Campaign : தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் விஜயகாந்த்

    விழுப்புரம்: சென்னையில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நாளையும் நாளை மறுநாளும் விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் செய்யவுள்ளதாக கட்சியின் பொருளாளரும் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

    தனது அனல் பறக்கும் வசனங்களால் திரையில் மிரட்டி வந்தவர் விஜயகாந்த். பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக இவர் பேசும் வசனங்களை இன்றைய தீவிரவாதிகள் கேட்டாலே போதும் சுளீரென அடித்தது போல் இருக்கும்.

    இதைத் தொடர்ந்து படத்தில் நடிப்பதை குறைத்து கொண்ட விஜயகாந்த், பொதுமக்களுக்கு நன்மை செய்வதற்காக அரசியலுக்கு வந்தார். கடந்த 2005 -ஆம் ஆண்டு தேமுதிக என்ற கட்சியை தொடங்கினார். தொடர்ந்து பல்வேறு சாதனைகளை புரிந்து வந்தார்.

    அறிவு கெட்ட முண்டங்கள்தான் இப்படித்தான் பேசும்.. சேலத்தில் நிதானம் இழந்த ராமதாஸ்! அறிவு கெட்ட முண்டங்கள்தான் இப்படித்தான் பேசும்.. சேலத்தில் நிதானம் இழந்த ராமதாஸ்!

    நாக்கை துறுத்தியவர்

    நாக்கை துறுத்தியவர்

    திமுகவையே ஓரங்கட்டிவிட்டு 2011-ஆம் ஆண்டு தேர்தலில் கூட்டணி கட்சியையே எதிர்த்து எதிர்க்கட்சியாக உயர்ந்தார். சட்டசபையில் ஜெயலலிதாவின் முன்பு தனது நாக்கை துறுத்தி எதிர்ப்பை காண்பித்தார்.

    தேர்தல்

    தேர்தல்

    இத்தகைய பெருமைகளுக்கு சொந்தக்காரரான விஜயகாந்துக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரது கட்சியை கவனித்து கொள்ளமுடியவில்லை. இதனால் தேர்தல்களில் தவறான முடிவை எடுத்து தோல்வியை சந்தித்தார்.

    பிரசாரம்

    பிரசாரம்

    இந்த நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அதாவது கடந்த ஆண்டு அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொண்டார். இதனிடையே தேமுதிக , அதிமுகவுடன் கூட்டணி வைத்தது. இவர்கள் கேட்ட எண்ணிக்கையிலான தொகுதிகளை அதிமுக வழங்காததற்கு முக்கிய காரணமாக விஜயகாந்தால் பிரசாரம் செய்ய முடியாது என கூறப்பட்டது.

    விஜயகாந்த்

    விஜயகாந்த்

    இதனால் தற்போது 4 தொகுதிகளை பெற்றது தேமுதிக. அதன் பொருளாளர் பிரேமலதா அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். அவர் செல்லும் இடங்களிலெல்லாம் விஜயகாந்த் குறித்த விசாரிப்புகளாகவே இருந்தது. செய்தியாளர்களும் விஜயகாந்த் பிரசாரம் செய்வாரா என கேள்வி எழுப்பினர்.

    நாளையும் நாளை மறுநாள்

    நாளையும் நாளை மறுநாள்

    இறுதி கட்ட பிரசாரம் ஓயவுள்ள நிலையில் விஜயகாந்த் வருவாரா வரமாட்டாரா என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து விழுப்புரத்தில் பிரசாரம் மேற்கொண்ட பிரேமலதா கூறுகையில் விஜயகாந்த் நாளையும் நாளை மறுநாளும் பிரசாரம் செய்யவுள்ளார்.

    தொண்டர்கள் மகிழ்ச்சி

    தொண்டர்கள் மகிழ்ச்சி

    அவர் சென்னையில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார் என அறிவித்தார். இதையடுத்து கூட்டத்தில் தொண்டர்கள் குதூகலத்தில் குதித்தனர். சென்னையில் மண்டையை பிளக்கும் வெயிலில் விஜயகாந்த் வேறு பிரசாரம் நடத்தவுள்ளதால் அனல் பறக்க போகிறது!

    English summary
    DMDK General Secretary Vijayakant starts his 2 days election campaign in Chennai from tomorrow. Cadres are very happy to hear this.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X