விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விறுவிறுப்பாக கிளம்பி விக்கிரவாண்டிக்கு வந்த விஜயகாந்த்.. மெல்ல பேசி வாக்கு சேகரிப்பு!

விக்கிரவாண்டியில் இன்று பிரச்சாரம் செய்கிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்

Google Oneindia Tamil News

Recommended Video

    விக்கிரவாண்டிக்கு வரும் விஜயகாந்த்... உற்சாகத்தில் தேமுதிக.. !

    விழுப்புரம்: "ஏஏய்.. சிங்கம் களம் இறங்கிடுச்சு.." என்று தேமுதிக தொண்டர்கள் படு உற்சாகத்தில் இன்று நாள் முழுவதும் இருந்தனர்.. ஒயிட் சண்டை & பேன்ட் & கூலிங்கிளாஸ் சகிதம் காரில் கலக்கலாக விக்கிரவாண்டிக்கு பிரச்சாரத்துக்கு வந்து சேர்ந்தார் விஜயகாந்த். ஆனால்.. ரொம்பவும் பேசவில்லை.. "இரட்டை இலை சின்னத்தில் முத்தமிழ் செல்வனுக்கு உங்கள் பொன்னான வாக்குகளை அளியுங்கள்" என்று மட்டும் கேட்டுக் கொண்டார்.

    திங்கட்கிழமை விக்கிரவாண்டி, நாங்குநேரி தேர்தல் நடக்க போகிறது.. அதற்கு இன்றுதான் கடைசி நாள் பிரச்சாரம்! அதிமுக - திமுக என இரு கட்சிகளுமே போட்டி போட்டுக் கொண்டு தேர்தலை சந்திக்க போகின்றன.

    இதற்கு இந்த இரு கட்சிகளின் கூட்டணி தலைவர்களும் முழு ஒத்துழைப்பு தந்து அதற்கான பிரச்சாரத்தையும் கையில் எடுத்தனர். அந்த வகையில் தேமுதிகவின் ஆதரவும் அதிமுகவுக்கு கிடைத்துள்ளது.

     உட்காருங்கண்ணா.. இருக்கட்டும் பரவாயில்லைம்மா.. நீங்க சீக்கிரம் வரணும்.. சிரித்து கொண்ட ரஜினிகாந்த் உட்காருங்கண்ணா.. இருக்கட்டும் பரவாயில்லைம்மா.. நீங்க சீக்கிரம் வரணும்.. சிரித்து கொண்ட ரஜினிகாந்த்

    வன்னியர்கள்

    வன்னியர்கள்

    விக்கிரவாண்டியை பொறுத்தவரை, வன்னியா் சமுதாயத்தை நம்பியே அதிமுக, திமுக களம் இறங்குகிறது. இதற்காகவே இந்த சமுதாயத்தை சோ்ந்தவா்களையே வேட்பாளராகவும் நிறுத்தி உள்ளது. இதில், அதிமுக சற்று கூடுதல் பலத்துடன் உள்ளது.. அபரிமிதமான பாமக வாக்குகள் அதிமுகவுக்கு இருந்தாலும், கிராமங்களில் பரவலாக தேமுதிகவின் ஆதரவும் உள்ளது என்பதை மறுக்க முடியாது.

    அமைச்சர்கள்

    அமைச்சர்கள்

    அதற்காகத்தான், இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே, அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் என அமைச்சர் பட்டாளமே விஜயகாந்த் வீட்டுக்கு ஓடிச்சென்று பொன்னாடை போர்த்தி ஆதரவு கேட்டது. இதையடுத்து, பிரேமலதாவும் விக்கிரவாண்டிக்கு வந்து பிரச்சாரம் செய்தார்.

    சிவி சண்முகம்

    சிவி சண்முகம்

    இன்று விஜயகாந்த்தும் வந்தார்.. "விஜயகாந்த் உடல்நிலை மட்டும் நன்றாக இருந்திருந்தால் தமிழக அரசியலின் நிலை வேறாக இருந்திருக்கும், ஸ்டாலின் அடையாளம் தெரியாமல் போயிருப்பார்" என்று ஏற்கனவே சிவி சண்முகம் தொகுதியில் பேசியது இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது.

    உடல்நிலை

    உடல்நிலை

    விஜயகாந்த்துக்கு உடம்பு சரியில்லை என்பது நமக்கு தெரியும் என்றாலும், இவரது வருகை தொண்டர்களுக்கும், விக்கிரவாண்டி ரசிகர்களுக்கும் உற்சாகத்தை தந்துள்ளது. போன எம்பி தேர்தலின்போதும், இப்படித்தான் விஜயகாந்த் வந்து பிரச்சாரம் செய்வார் என்று பிரேமலதா சொன்னார். ஆனால், கடைசி நாளன்று வந்து ஓரிரு வார்த்தை மட்டுமே பேசிவிட்டு போனார். அதுவும் சென்னையில் மட்டும்!

    காரில் பயணம்

    காரில் பயணம்

    இப்போதும் கடைசி நாளன்று தான் வந்தார் விஜயகாந்த். சாயங்காலம் 6 மணிக்கு பிரச்சாரம் முடிந்தது. இதற்காக வீட்டில் இருந்து மதியமே காரில் கிளம்பிவிட்டார்.. வெள்ளை சட்டை, புளு பேன்ட் போட்டு, கூலிங்கிளாஸுடன் காரில் உட்கார்ந்து பயணம் செய்து, விக்கிரவாண்டியை நோக்கி வந்தார்.

    ஆதரவு

    வந்து என்ன பேச போகிறார், என்றெல்லாம் தெரியாமலேயே அவரது முகத்தை பார்க்க விக்கிரவாண்டி தொகுதி கிராம கூட்டம் ஆர்வமாக இருந்தது. அதனால் பாமக ஆதரவு அபரிமிதமாக இருந்தாலும், தேமுதிகவின் ஆதரவும் அதிமுகவுக்கு கொஞ்சமாவது கிடைக்கும் என்பதை மறுக்க முடியாது.

    விஜயகாந்த் பார்ப்பதற்கு முன்பை விட தெளிவாக காணப்பட்டார். பிரச்சார வேனில் ஏறி கொஞ்சம் நேரம் நின்று கொண்டிருந்தார். கூடியிருந்த மக்களை பார்த்து கையசைத்தார்.. கைகளை கூப்பி வணக்கம் சொன்னார். பின்னர், பிரச்சார வேனுக்குள் உட்கார்ந்து கொண்டார். நிறைய பேசுவார் என்று மக்கள் ஆர்வமாக எதிர்பார்த்தனர். ஆனால் அதிகம் பேசிவில்லை.. "இரட்டை இலை சின்னத்தில் முத்தமிழ் செல்வனுக்கு உங்கள் பொன்னான வாக்குகளை அளியுங்கள்" என்று மட்டும் கேட்டுக் கொண்டார். 2 மைக் பிடிக்கப்பட்டும், அவரது குரல் கம்மி இருந்தது.. கம்பீரம் குறையவில்லை.. ஆனால், கடைசி வரை அந்த கூலிங் கிளாஸை அவர் கழட்டவே இல்லை!

    English summary
    dmdk president vijayakanth is campaigning for the alliance party AIADMK in vikkiravandi constitution today
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X