விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விக்கிரவண்டியில் தாமதமாக தொடங்கிய வாக்கு எண்ணிக்கை- தொண்டர்கள் அதிர்ச்சி.. 30 நிமிடம் என்ன நடந்தது?

Google Oneindia Tamil News

விழுப்புரம்: விக்கிரவாண்டியில் வாக்கு எண்ணிக்கை தாமதமாக தொடங்கி உள்ளது. 30 நிமிடம் தாமதமாக வாக்கு எண்ணிக்கை துவங்கியது.

விக்கிரவாண்டி தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது. விக்கிரவாண்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த தி.மு.கவைச் சேர்ந்த கே. ராதாமணி மரணமடைந்ததால் அந்தத் தொகுதி காலியாக இருக்கிறது. இதனால் அங்கு இடைத்தேர்தல் நடந்தது.

Vikravandi By Election Results: Why counting starts after 30 mins?

விக்கிரவாண்டி தொகுதியில், திமுக வேட்பாளராக நா.புகழேந்தியும், அதிமுக வேட்பாளராக, முத்தமிழ்ச்செல்வன் போட்டியிட்டனர். விக்கிரவாண்டியில் 76% வாக்குகள் பதிவாகி உள்ளது.

இந்த நிலையில் காலை 8 மணிக்கு துவங்க வேண்டிய வாக்கு எண்ணிக்கை விக்கிரவாண்டியில் 8.30 மணிக்குத்தான் தொடங்கியது. தபால் வாக்குகளை எண்ணும் முன் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.

நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்கள் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்கள் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!

மொத்தம் விக்கிரவாண்டியில் 47 தபால் வாக்குகள் பதிவானது. ஆனால் இதற்கான கையெழுத்து, வாக்குச்சாவடி அதிகாரியால் போடப்படாமல் இருந்தது. இதனால் அங்கு இருந்த திமுக, அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர் கையெழுத்து இட்ட பின்பே வாக்குகளை எண்ண முடியும். வாக்குச்சாவடி அதிகாரி வர கால தாமதம் ஆனதால், இந்த வாக்குகள் 30 நிமிடம் கழித்து எண்ணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதுதான் விக்கிரவாண்டியில் வாக்கு எண்ணிக்கை தாமதமாக தொடங்க காரணம் என்று கூறப்படுகிறது.

English summary
Vikravandi By Election Results: Why counting starts after 30 mins? - here is the reason.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X