விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விக்கிரவாண்டி.. யார் இந்த முத்தமிழ்ச் செல்வன்.. அவருடைய பின்னணி என்ன?

Google Oneindia Tamil News

Recommended Video

    2 தொகுதிகளிலும் நாங்கதான் போட்டி..பாஜகவுக்கு ஏமாற்றத்தைத் தந்த அதிமுக | By Election

    சென்னை: விக்கிரவாண்டி தொகுதிக்கு அதிமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முத்தமிழ்ச்செல்வன் முதல்வர் இ.பி.எஸ்.ஆதரவாளர் எனக் கூறப்படுகிறது.

    விக்கிரவாண்டி சட்டசபை இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை அதிமுக தலைமைக் கழகம் இன்று அறிவித்தது. அதன்படி முத்தமிழ்ச்செல்வன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    விக்கிரவாண்டி தொகுதி வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன்1982-ம் ஆண்டு முதல் அதிமுகவில் உறுப்பினராக உள்ளார். அவருடைய அப்பா ஆசிரியராகவும், அம்மா ஊராட்சிமன்றத் தலைவராகவும் இருந்தனர். இவரும் கூட்டுறவு சங்கம் உள்ளிட்ட பல அரசுப்பதவிகளில் இருந்தவர்.

    அதிமுக அதிரடி.. நாங்குநேரி, விக்ரவாண்டி தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்புஅதிமுக அதிரடி.. நாங்குநேரி, விக்ரவாண்டி தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு

     பெரும் பணக்காரர்

    பெரும் பணக்காரர்

    காணை ஒன்றியத்திற்குட்பட்ட கல்பட்டு கிராமத்தில் பெருமளவு நிலபுலங்களுக்கு சொந்தக்காரர் முத்தமிழ்ச்செல்வன். கட்சிப்பணிகள் போக மீத நேரம் தனது தோட்டத்திலேயே நேரத்தை செலவழிப்பவர். இவருடைய மனைவி கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்ட நிலையில் தற்போது மகனுடன் வசித்து வருகிறார்.

     இ.பி.எஸ்.க்கு ஆதரவு

    இ.பி.எஸ்.க்கு ஆதரவு

    முத்தமிழ்ச்செல்வனுக்கு ஒன்றியச்செயலாளர் பதவி கிடைக்க 2015-ம் ஆண்டு பரிந்துரை செய்தவர் முன்னாள் ராஜ்யசபா எம்.பி. மருத்துவர் லட்சுமணன். ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்கிய போது லட்சுமணன் ஓ.பி.எஸ்.க்கு ஆதரவு தெரிவித்து அவர் பக்கம் சென்றார். அப்போது ஒன்றியச் செயலாளராக இருந்த முத்தமிழ்ச்செல்வனை லட்சுமணன் ஓ.பி.எஸ்.அணிக்கு வருமாறு பலமுறை அழைப்பு விடுத்தார்.

     அமைச்சர் ஆதரவு

    அமைச்சர் ஆதரவு

    ஆனால் அவர் நேராக அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் சரணடைந்து அவரது ஆதரவாளராக மாறினார். அன்று முதல் இன்று வரை அமைச்சர் சண்முகத்தின் வாக்கை வேதவாக்காக எடுத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறார் முத்தமிழ்ச்செல்வன்.

     டிக் அடித்த இ.பி.எஸ்.

    டிக் அடித்த இ.பி.எஸ்.

    மொத்தம் 36 பேர் விருப்பமனு அளித்து நேர்காணலில் பங்கேற்ற நிலையில், இக்கட்டான சூழலில் தன்னோடு இருந்த காரணத்திற்காக முத்தமிழ்ச்செல்வனை டிக் அடித்து அவருக்கு வாய்ப்பு தந்துள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

    English summary
    vikravandi by electon admk candidate muthamail selvan background details
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X