விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சாப்பிட்டது ஓசி.. பில் கொடுக்க மாட்டேன்னு தகராறு.. திமுக பிரமுகர் சக்கரையால் பரபரப்பு.. வீடியோ

விழுப்புரம் நகர திமுக பிரமுகரின் வீடியோ சர்ச்சையாகி வருகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    Watch Video : Vizhupuram DMK Secretary Sakkaris controversy video goes viral

    விழுப்புரம்: ஓசி சோறு சாப்பிட்டுவிட்டு, அதற்கு பில் கொடுக்க மாட்டேன் என்று தகராறு செய்கிறார் விழுப்புரம் திமுக பிரமுகர் சக்கரை... இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை தந்து வருகிறது.

    ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. விழுப்புரத்தின் திமுக செயலாளர் பெயர் சக்கரை. நகரில் உள்ள ஃபேமஸ் ஆன ஹோட்டல் ஆனந்தாஸ்-க்கு இவர் சாப்பிட சென்றிருந்தார். அங்கு சக்கரைக்கு இலை விரித்து சாப்பாடு பரிமாறப்பட்டது. சாப்பிட்டு முடிந்ததும், அதற்கு பில் தரப்பட்டது.

    Vizhupuram DMK Secretary video goes viral

    ஆனால், பில்லை பார்த்ததும் சக்கரை டென்ஷன் ஆகி விட்டார்போல. ஏற்கனவே குடிபோதையில் இருந்தவர், பில்லை நீட்டியதும், காச்மூச்சென்று கத்த ஆரம்பித்துவிட்டார். வார்த்தைகளில் பதிவிட முடியாத அளவுக்கு கெட்ட கெட்ட வார்த்தைகளில் ஹோட்டல் ஊழியர்களை திட்டி உள்ளார் சக்கரை.

    இதனை அங்கிருக்கும் பொதுமக்களே வீடியோ எடுத்து இணையத்திலும் பதிவிட்டுள்ளனர். வீடியோ முழுக்க பீப் சவுண்டுதான் கேட்கிறது. அந்த அளவுக்கு பச்சை பச்சை வார்த்தைகளை கொட்டி கலாட்டா செய்துள்ளார்.

    சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.கே.மிட்டல்- கொலீஜியம் பரிந்துரை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.கே.மிட்டல்- கொலீஜியம் பரிந்துரை

    கருணாநிதியின் உழைப்பு, தியாகம், அர்ப்பணிப்புடன் வார்த்தெடுத்த கட்சி திமுக. ஆனால் அக்கட்சியில் உள்ள ஒரு சிலரின் அடாவடி சம்பவங்கள் திமுகவின் மதிப்பை பாழ்படுத்தி வருகின்றன.

    அதிலும் கருணாநிதி இறந்த பிறகு, பியூட்டி பார்லர், பிரியாணி கடை உட்பட இந்த அராஜகம் நிறைய நடந்து வருகிறது. இது சம்பந்தமான நடவடிக்கையை திமுக தலைவர் அப்போதே உடனடியாக எடுத்திருந்தார். எனினும், கட்சி பெயருக்கு பங்கம் விளைவிப்பவர்கள் ஆங்காங்கே முளைத்து கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களையும் களையெடுக்க வேண்டும் என்பதே பொதுவான விருப்பம்!

    English summary
    Vizhupuram DMK Secretary Sakkaris controversy video goes viral on socials now
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X