விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பெற்றோர்களின் மனநிலை என்ன என்பதை அறிந்து பள்ளிகள் திறக்கப்படும் - முதல்வர் பழனிச்சாமி

பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவது குறித்து அவர்களது பெற்றோரின் மனநிலை என்ன என்பதை அறிந்த பின்பு, தமிழகத்தில் பள்ளிகளை மீண்டும் திறப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார

Google Oneindia Tamil News

விழுப்புரம்: மக்கள் மத்தியில் கொரோனா அச்சம் குறைந்து படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருவதால் பள்ளிகள் திறப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவது குறித்து அவர்களது பெற்றோரின் மனநிலை என்ன என்பதை அறிந்த பின்பு, தமிழகத்தில் பள்ளிகளை மீண்டும் திறப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் 45 லட்சம் பேர் வரை கொரேனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 34 லட்சம் பேர் வரை குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் 5 லட்சம் பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

When School reopen tamilnadu says Chief Minister Edapadi Palanisamy

விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் கொரோனா பரவல் தடுப்பு பணிகள் குறித்து அரசு உயரதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று நேரில் ஆய்வு நடத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிச்சாமி, நீட் நுழைவு தேர்வு வேண்டாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு. ஆனால், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வரை சென்ற பிறகும் ஒன்றும் செய்ய இயலவில்லை என்று கூறினார்.

கல்லூரி மாணவர்களுக்கான அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் அரசின் நிலைப்பாட்டை, உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெளிவுப்படுத்தியுள்ளார். இதில் யுஜிசியின் விதிமுறைகள் பின்பற்றப்படும் என்று அரசு சொன்ன பிறகும் திட்டமிட்டு வதந்தி பரப்பப்பட்டு வருகிறது என்றும் முதல்வர் தெரிவித்தார்.

பள்ளிகள் திறப்பது பற்றிய கேள்விக்கு பதிலளித்த முதல்வர், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவது குறித்து அவர்களது பெற்றோரின் மனநிலை என்ன என்பதை அறிந்த பின்பு, தமிழகத்தில் பள்ளிகளை மீண்டும் திறப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும். மக்கள் மத்தியில் கொரோனா அச்சம் குறைந்து படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருவதால் பள்ளிகள் திறப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தேசிய கண்தான தினம்.. தனது கண்களை தானம் செய்வதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு தேசிய கண்தான தினம்.. தனது கண்களை தானம் செய்வதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

நாடு முழுவதும் செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் பள்ளிகளை பகுதியளவில் திறக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அத்துடன் அன்றைய தேதியில் இருந்து ஒன்பதாம் வகுப்பு முதல் ப்ளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவர்கள் தங்களது சுயவிருப்பத்தின் பேரில் பள்ளிக்கு சென்று ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறலாம் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட நான்காம் கட்ட லாக்டவுன் தளர்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் தமிழகத்தில் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை விடப்படுவதாக கூறியுள்ளார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். இந்த நிலையில் தமிழகத்தில் பள்ளிகளை மீண்டும் திறப்பு குறித்து முதல்வர் பழனிச்சாமி பெற்றோர்களின் மனநிலை அறிந்து பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறியுள்ளார்.

English summary
Chief Minister Palanisamy has said that the reopening of schools will be announced later as the fear of corona among the people is gradually returning to normal. He said a decision on reopening schools in Tamil Nadu would be taken after knowing the mood of their parents about sending their children to school.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X