• search
விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"அடங்கா" மேரி.. 20 வயது மாணவனுடன்.. இறுதியில் ஒரு கொலை.. விக்கித்து போன விக்கிரவாண்டி

Google Oneindia Tamil News

விழுப்புரம்: 2 குழந்தைகளின் அம்மாவுக்கு, 20 வயசு கல்லூரி மாணவருடன் உறவு இருந்துள்ளது.. கடைசியில் ஒரு கொலை.. கைது.. என கொடூரத்தில் முடிந்துள்ளது இந்த விவகாரம்.

  விழுப்புரம்: கள்ளக்காதலால் கணவன் கொலை: மனைவிக்கு போலீஸ் வலைவீச்சு!

  விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியை சேர்ந்தவர் லியோபால்.. இவர் ஒரு டிரைவர்.. சுசித்திரா மேரி என்பவரை உயிருக்கு உயிராக காதலித்தார்... அவரையே கல்யாணமும் செய்து கொண்டார்... இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சென்னையில் ஒரு வீடு எடுத்து தங்கி வேலை பார்த்து வந்தனர்.

  மகிழ்ச்சியான வாழ்க்கை நடந்து கொண்டிருந்தது.. இந்தசமயத்தில்தான் லாக்டவுன் போட்டுவிட்டார்கள்.. இதனால், வாடகை உட்பட எதுவுமே சரியாக தர முடியாமல், குழந்தைகளுக்கும் போதுமான உணவு தர முடியாத சூழல் வந்தது.. எனவே, மேரியையும், குழந்தைகளையும் சொந்த ஊரில் கொண்டு வந்துவிட்டு விட்டு, சென்னைக்கே திரும்பிவிட்டார் லியோபால்.

   டாட்டூ

  டாட்டூ

  டிரைவர் வேலை கிடைத்தால் செய்வது, மிச்ச நேரத்தில் உடம்பில் டாட்டூ குத்தும் டிரெயினிங்கை 6 மாசமாக எடுத்து வந்துள்ளார்.. இதனிடையே, சொந்தக்காரர் கல்யாணத்துக்கு புதுச்சேரி சென்ற தனது கணவனை காணவில்லை என்று தன்னுடைய மாமனார் சகாயராஜுக்கு போன் செய்து தகவல் சொன்னார்.. இதை கேட்டு அதிர்ந்து போன சகாயராஜ், விக்கிரவாண்டி ஸ்டேஷனில் புகார் தரலாம், கிளம்பி வா என்று சொன்னார்.. ஆனால், மேரி அந்த ஸ்டேஷனுக்கு போகவில்லை..

  மேரி

  மேரி

  இதனால் வீட்டில் இருக்கிறாரா என்று சகாயராஜ் சென்று பார்த்துள்ளார்.. ஆனால், மேரி வீட்டிலும் இல்லை.. 2 குழந்தைகள் மட்டும் தனியாக இருந்தனர்.. அப்போதுதான் சகாயராஜுக்கு சந்தேகம் வலுத்தது.. அதனால் வீட்டை சுற்றிலும் ஆராய்ந்தார்.. அப்போது வீட்டின் பின்பக்கம் மண் போட்டு எதையோ மூடி வைத்ததற்கான தடயம் தென்பட்டது.. இதனால் மேலும் சந்தேகம் அதிகமானதால், சகாயராஜ், இறுதியில் போலீசுக்கே போய்விட்டார்..

  போலீஸ்

  போலீஸ்

  மகனை காணவில்லை என்று சொல்லி, அவருக்கு இருந்த சந்தேகத்தையும் கூறினார். போலீசாரும் அதன்பேரில் விசாரணையை துவக்கினர்.. சகாயராஜ் சந்தேகப்பட்ட அந்த இடத்தை, தோண்டினர்.. அப்போதுதான், லியோவின் சடலம் தெரிந்தது.. தலையெல்லாம், கழுத்தெல்லாம் காயம் என உடம்பெல்லாம் அடையாளம் தெரியாத அளவுக்கு காயங்கள் நிரம்பி கிடந்தன.. அந்த சடலமோ அழுகிய நிலையில் கிடந்தது..
  இதன்பிறகு தான் விசாரணை தீவிரமானது.. அப்போதுதான் மேரியின் கள்ள காதலும் வெளிச்சத்துக்கு வந்தது.

  மாணவன்

  மாணவன்

  மனைவி பிள்ளைகளுக்காக லியோபால் சென்னையில் கஷ்டப்பட்டு கொண்டிருந்தால், இங்கே மேரி பக்கத்து வீட்டு இளைஞருடன் ஜாலியாக இருந்துள்ளார்.. அந்த இளைஞன் பெயர் ராக்கி.. வயசு 20 ஆகிறது.. டிப்டாப் பேர்வழி.. கல்லூரி மாணவன்.. வித விதமான டிரஸ், ஹேர்ஸ்டைலுடன் அந்த ஏரியாவை கலக்கியவர்.. இதில்தான் மேரி விழுந்துவிட்டார். மேரிக்கு 30 வயதாகிறது..

  கொலை

  கொலை

  இருவரும் ஊரெல்லாம் சுற்றி வந்திருக்கிறார்கள்.. ஆனால், அடிக்கடி லியோபால் ஊருக்கு வந்துபோவதால், இவர்களுக்கு இடைஞ்சலாக இருந்துள்ளது.. அதனாலேயே அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளனர் கள்ள ஜோடி 2 பேரும். சம்பவத்தன்று, அதாவது கடந்த மாதம் 4-ம் தேதி ஊருக்கு வந்துள்ளார் லியோ.. தண்ணி அடித்துவிட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்..அப்போதுதான், அவரது கழுத்தை 2 பேரும் நெருக்கி கொன்று, இரும்பு கம்பியால் உடம்பெல்லாம் அடித்து தாக்கி உள்ளனர். சடலத்தை அப்போதே பின்பக்கம் கொண்டு போய் குழி தோண்டி புதைத்தும் உள்ளனர்..

  கொலை

  கொலை

  புதுச்சேரியில் அப்படி ஒரு கல்யாணமே நடக்கவில்லையாம்.. லியோவை காணோம் என்ற விவகாரம் தீவிரமானதுமே, பயந்துபோன மேரி, குழந்தைகளை விட்டுவிட்டு வீட்டை விட்டு ஓடிப்போய் உள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவான 2 பேரையும் தேடும் பணி ஆரம்பமாகி உள்ளது.. கள்ளக்காதலர்கள் 2 பேரின் போட்டோவையும் வைத்து போலீசார் தேடி வருகிறார்கள்.. 2 குழந்தைகளும் அம்மாவை காணோம் என்று கதறி கொண்டுள்ளனர்.. மேரியைதான் காணோம்..!

  English summary
  Wife killed husband due to illegal relationship near Vizhupuram
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X