• search
விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

மணிமேகலைக்கும், மணிகண்டனுக்கும் வந்த கள்ளக்காதல்.. குழந்தையும் பிறந்துவிட்டது.. கடைசியில் நடந்த ஷாக்

|

கள்ளக்குறிச்சி: "குழந்தை ஏன் அந்த மணிகண்டன் ஜாடையில் இருக்கு.. என் ஜாடை சுத்தமா இல்லையே" என்று மணிமேகலையிடம் ஆவேசமானார் கணவர்.. இறுதியில் அவர் சந்தேகப்பட்டது போலவே, மணிகண்டனுக்கும், மணிமேகலைக்கும் கள்ளக்காதலாம்.. அது இப்போது ஒரு கொலையில் வந்துள்ளது!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது ஆத்தூர் என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் பாலமுருகன்... பெங்களூருவில் கட்டட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.. இவரது மனைவி மணிமேகலை... அவரும் ஆத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்தான்.

இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் பிறந்தனர்.. மணிமேகலையை கிராமத்திலேயே தங்க வைத்துவிட்டு, பாலமுருகன் மட்டும் பெங்களூருக்கு வேலைக்கு போய்விட்டார்.. வேலை இல்லாத சமயங்களில் அடிக்கடி ஊருக்கு வந்துவிட்டு போவார்.

 wife killed husband with his lover near kallakkurichi

8 மாசத்துக்கு முன்பு மணிமேகலைக்கு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் 2 வது குழந்தை பிறந்தது.. குழந்தையை பார்க்க ஆசை ஆசையாக ஓடிவந்தார் பாலமுருகன்.. ஆனால், அந்த குழந்தை தன் ஜாடையை போல இல்லை என்றதும் டென்ஷன் ஆகிவிட்டார்.. அதுமட்டுமல்ல, ஆஸ்பத்திரியில் இருந்து நேராக மணிகண்டன் வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டார்.. மணிகண்டனும் அதே ஊரை சேர்ந்தவர்தான்.. அதற்கு பிறகு பாலமுருகன் ஊர் பக்கமே வரவில்லை.

வழக்கமாக அடிக்கடி ஊரில் இருந்து வரும் பாலமுருகன், கடந்த 3 மாசமாக ஊருக்கு வரவே இல்லை.. போன் செய்தாலும் எடுக்கவில்லை.. அதனால், அவரது சகோதரரின் கணவன் கோவிந்தராஜுக்கு சந்தேகம் வந்தது.. பல இடங்களில் தேடினார்.. இறுதியாக, "மைத்துனரை காணவில்லை" என்று திருநாவலூர் போலீசில் புகார் தந்தார். இதையடுத்து போலீசாரும் பாலமுருகனை தேடினர்.. விசாரணையையும் ஆரம்பித்தனர்.. முதல் விசாரணையே மணிமேகலைதான்!

ஆனால் பாலமுருகன் பற்றி எதையுமே அவர் சரியாக சொல்லவில்லை.. அதனால் துப்பு கிடைக்காமல் தவித்தனர்.. பிறகுதான் அந்த கிராம மக்களிடம் விசாரித்தனர்.. மணிமேகலையின் வண்டவாளம் அப்போதுதான் தெரியவந்தது.. மணிமேகலைக்கும் - மணிகண்டனுக்கும் கள்ளகாதலாம்!

இது தெரியவந்ததும் மணிகண்டனை அள்ளிக் கொண்டு போய் ஸ்டேஷனில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.. ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தையை பார்த்ததுமே அது மணிகண்டன் ஜாடையிலேயே இருந்ததாம்.. அதனால்தான் மணிமேகலையின் கள்ளக்காதலை பாலமுருகன் உறுதி செய்து கொண்டுள்ளார்.. அங்கிருந்து ஆவேசமாக கிளம்பியதுமே, மணிமேகலை டக்கென மணிகண்டனுக்கு போன் செய்து விஷயத்தை சொல்லி உள்ளார்.

இதனால் மணிகண்டன் உஷாரானார்.. தன்னை தேடி வீட்டுக்கு வந்த பாலமுருகனை சரமாரியாக தாக்கினார்.. வீட்டில் தண்ணீர் பிடிக்க வைத்திருந்த பித்தளை குடத்தாலும், சுத்தியாலும் அடித்தார்.. தலையை பிடித்து ஒரு சுவற்றில் முட்டி முட்டி மோத வைத்து சாகடித்துவிட்டார்.. மண்டை பிளந்து அங்கேயே உயிரிழந்தார் பாலமுருகன் ... பாலமுருகன் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அப்படியா.. துரைமுருகனுக்கு போன் போட்டாரா முக. அழகிரி.. டி.ஆர்.பாலுவை மட்டும் வாழ்த்தலயாமே.. உண்மையா?

பிறகு தன்னுடைய சகோதரரை வரவழைத்து, அந்த சடலத்தை ஒரு சாக்கு மூட்டையில் கட்டி, பைக்கில் வைத்து கொண்டு, விடிகாலை நேரம் சுடுகாட்டுக்கு எடுத்து சென்றுள்ளார் மணிகண்டன்... பாலமுருகன் உடலை எரித்துள்ளார்.. சடலம் எரியும் வரை அங்கேயே காத்திருந்துள்ளார்.. பிறகு அந்த எலும்புகளை பெரிய பெரிய கற்களை கொண்டு, தடம் தெரியாமல் நொறுக்கி உள்ளார்.. மிச்ச சாம்பலை அள்ளி கட்டிக் கொண்டு, பக்கத்தில் இருந்த ஒரு ஆற்றில் கரைத்தும் விட்டாராம்.. இதை கேட்டு போலீசாரே ஆடிப்போய்விட்டனர்.

இப்போது, மணிகண்டன், அவரது சகோதரர் தனசேகர், மணிமேகலை 3 பேரும் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்கள்!!

 
 
 
English summary
wife killed husband with his lover near kallakkurichi
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X