விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கூடா நட்பு.. "கூப்பிடறாங்க" கதறிய கடல் கன்னி.. தற்கொலைக்கு முயற்சி.. டிக்டாக் விபரீதம்!

டிக்டாக் விபரீதத்தில் பெண் தற்கொலை முயன்றுள்ளார்

Google Oneindia Tamil News

விழுப்புரம்: "ஒரு நம்பர் தருகிறோம்.. அந்த நபருடன் நெருக்கமாக பழகினால் பணம் தருவார்" என்று விபச்சாரத்தில் தள்ளிவிட முயன்றுள்ளனர் டிக்டாக் தோழிகள்.. இறுதியில் ஃபேனில் தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயற்சித்து மீண்டுள்ளார் கடல்கன்னி!

எங்கு பார்த்தாலும் இந்த டிக் டாக் அக்கப்போர்கள் அதிகரித்து வருகின்றன. கண்டதையும் செய்து விட்டு அப்படி நடந்துருச்சு இப்படி நடந்திருச்சுன்னு புகார்களுடன் கண்ணீரும் கம்பலையுமாக கிளம்பி விடுகிறார்கள். அப்படித்தான் கடல் கன்னி என்ற பெண் இப்போது ஒரு புகாருடன் கிளம்பியுள்ளார்.

செஞ்சியை அடுத்த சத்யமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கடல்கன்னி.. 39 வயதாகிறது.. கணவரை இழந்தவர் கடல்கன்னி... 3 குழந்தைகள் இருக்கிறார்கள்.. விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்.

 நெருங்கி.. உரசி நின்ற பெண்.. சபலம், போதையில் விழுந்த 67 வயசு தாத்தா... பேத்தியை தொலைத்த கொடுமை! நெருங்கி.. உரசி நின்ற பெண்.. சபலம், போதையில் விழுந்த 67 வயசு தாத்தா... பேத்தியை தொலைத்த கொடுமை!

டிக்டாக் வீடியோ

டிக்டாக் வீடியோ

கடந்த 2 வருடங்களாக டிக் டாக்கை கலக்கி வருபவர் கடல்கன்னி.. நிறைய டிக் டாக் வீடியோக்களை அடிக்கடி வெளியிடுவார்.. இவருக்கு 33 ஆயிரம் ஃபாலோவர்ஸ் இருக்கிறார்கள். இதற்கு காரணம் நல்ல நல்ல கருத்துக்களுடன் கூடிய வீடியோவை பதிவிடுவதுதான். அதனால் குறிப்பிட்ட அளவில் இவருக்கு ரசிகர்கள் உள்ளதால், இவரது வீடியோக்கள் வைரலாகும்.

நட்பு

நட்பு

இந்நிலையில் டிக் டாக் மூலம் விழுப்புரத்தை சேர்ந்த லதா, சென்னையை சேர்ந்த கவிதா, சுமதி என்பவர்கள் கடல்கன்னிக்கு அறிமுகமானார்கள்.. ஆனால் அவர்கள் டிக்டாக் பாணி வேறு மாதிரியாக இருந்திருக்கிறது.. எனினும் கடல் கன்னியிடம் நட்பாக பேசினார்கள்.. நெருக்கம் ஆனார்கள். அதனால் தன்னுடைய குடும்ப கஷ்டத்தை அவர்களிடம் சொல்லி சொல்லி கடல் கன்னி அடிக்கடி அழுவாராம்... அவர்களும் ஆறுதல் சொல்வார்களாம்!

ஆசை வார்த்தை

ஆசை வார்த்தை

அப்படித்தான் ஒருமுறை பேசும்போது, "தாங்கள் சொல்லும் சென்னையை சேர்ந்த நபருடன் நெருக்கமாக பழகினால் பணம் தருவார்.. எப்படியும் 2 லட்சம் ரூபாய்கூட தருவார்.. அந்த பணத்தில் உன் வீட்டை புதிதாக கட்டிக் கொள்ளலாம்" என்று ஆசை வார்த்தை காட்டி உள்ளனர்.. தொடர்ந்து விபசாரத்தில் ஈடுபடவும் வற்புறுத்தி உள்ளனர்.. ஆனால் இதற்கு எடுத்த எடுப்பிலேயே கடல் கன்னி மறுப்பு சொன்னாராம்.

தற்கொலை முயற்சி

தற்கொலை முயற்சி

விபச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என்று தொடர்ந்து பேசவும், மன வேதனைக்கு ஆளான கடல்கன்னி 2 நாளைக்கு முன்பு வீட்டில் ஃபேனில் தூக்கில் தொங்க முயன்றார்.. இதை பார்த்து பதறிய குடும்பத்தினர் அவரை மீட்டு, செஞ்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கவும், தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.. "வேணாம்னு சொல்லியும் என்னை விபச்சாரத்துக்கு வற்புறுத்தனாங்க.. மிரட்டினாங்க.." என்று கண்ணீர் விடுகிறார் கடல் கன்னி! சத்தியமங்கலம் போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

English summary
woman attempted suicide due to tik tok issue and police inquiry is going on it
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X