விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தைலத் தோப்பில் அநியாயம்.. 14 வயது சிறுமியை நாசமாக்க முயன்ற இளைஞர்.. போக்சோவில் கைது

மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்

Google Oneindia Tamil News

விழுப்புரம்: ஸ்கூலில் இருந்து மகளை அழைத்து வரும்படி இளைஞரை நம்பி அனுப்பினார் தந்தை. ஆனால் அந்த இளைஞரோ.. 14 வயது சிறுமியை தைலதோப்பிற்கு அழைத்து சென்று தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் கொம்பசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த சிறுமி அருகில் உள்ள பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

Young man arrested under posco near villupuram

வழக்கமாக, இவளது அப்பாதான் பள்ளியில் இருந்து அழைத்து வருவார். ஆனால் சம்பவத்தன்று, ராஜீவ் காந்தி என்ற இளைஞரை பள்ளிக்கு அனுப்பி மகளை அழைத்து வர சொல்லி உள்ளார் சிறுமியின் தந்தை. இந்த இளைஞர், இவர்களின் உறவினர் என்று தெரிகிறது.

அதன்படியே ராஜீவ்காந்தி, பள்ளிக்கு சென்று, சிறுமியை அவளது அப்பா அழைத்து வர சொன்னதாக சொல்லி உள்ளார். மாணவியை கூப்பிட வந்தவர், உறவினர் என்பதால் கிளாஸ் டீச்சரும் அவருடன் அனுப்பி வைத்துள்ளார்.

கொடுமை.. படுக்கையில் ரத்த வெள்ளத்தில் தாய்.. தூக்கில் தொங்கிய தந்தை.. கதறிய 7 வயது மகன்கொடுமை.. படுக்கையில் ரத்த வெள்ளத்தில் தாய்.. தூக்கில் தொங்கிய தந்தை.. கதறிய 7 வயது மகன்

ஆனால் ராஜீவ்காந்தி, மாணவியை அழைத்து கொண்டு வீட்டுக்கு போகாமல், பக்கத்தில் இருந்த தைலத்தோப்பிற்கு கூட்டி சென்று விட்டார். அங்கு சிறுமியிடம் தவறாக நடக்கவும் முயற்சி செய்துள்ளார். இதனால் பயந்து நடுங்கிய மாணவி அலறி சத்தம் போட்டுள்ளார். இதை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவருவதற்குள், ராஜீவ்காந்தி தப்பி ஓடிவிட்டார்.

இதையடுத்து சிறுமியை மீட்ட பொதுமக்கள் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பின்னர், நடந்த விவரம் குறித்து சிறுமி வீட்டில் சொல்லி அழுதுள்ளார். இதை கேட்டு அதிர்ந்த பெற்றோர், உடனடியாக திருக்கோவிலூர் மகளிர் போலீசில் புகார் செய்யவும், அதனடிப்படையில் ராஜீவ் காந்தியை போலீசார் போக்சோவில் கைது செய்து கடலூர் ஜெயிலில் அடைத்தனர்.

English summary
Sexual harassment for 9th std student and Young man arrested under posco near Villupuram
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X