விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை திருவிழா ரத்து

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வரும் 20ஆம் தேதி நடைபெற இருந்த பிரசித்தி பெற்ற ஆடி அமாவாசை திருவிழா கொரோனா தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

விருதுநகர்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வரும் 20ஆம் தேதி நடைபெற இருந்த பிரசித்தி பெற்ற ஆடி அமாவாசை திருவிழா கொரோனா தொற்று காரணமாக ரத்து செய்யப்படுவதாகவும், வழக்கமான பூஜை மட்டும் நடைபெறும் எனவும் கோயில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அத்துடன், பொதுமக்கள் யாரும் கோயிலுக்கு வரவேண்டாம் எனவும் கோயில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

விருதுநகர் மாவட்டம், தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து மேற்கு தொடர்ச்சி மலைமேல் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்கள் உள்ளன. இக்கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. வழக்கமாக ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இந்த திருவிழாவானது நடைபெறும்.

சதுராசலம், சித்தர்கள் தேசம், சிவன்மலை, மூலிகைவனம் என்று பெரியோர்களால் போற்றப்படும் சதுரகிரி மலையில் கோயில் கொண்டுள்ளார், சுந்தர மகாலிங்கப் பெருமானார். மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் கோடியருகே மேற்பகுதி தட்டையான, சதுர வடிவிலான நான்கு மலைகள் உண்டு. நான்கு வேதங்களே சிவகிரி, விஷ்ணுகிரி, பிரம்மகிரி, சித்தர்கிரி என்ற பெயர்களில் மலைகளாகி நிற்க, அவற்றின் நடுவில் கம்பீரமாக அமைந்திருக்கிறது சதுரகிரி. மூலிகைகள் நிரம்பிய மலையின் மேல் சிவபெருமான் வீற்றிருக்கிறார். சதுரகிரியை அகஸ்தியர் உள்ளிட்ட சித்தர்கள், பஞ்சபூத லிங்கம் என்பர். இந்த மகாலிங்க மலையை 'சித்தர்கள் வாழும் பூமி' என்று அழைக்கின்றனர்.

ஆனி முடிந்து ஆடி பிறக்கப் போகுது - ஆடி அமாவாசை, ஆடிப்பூரம் இன்னும் என்னென்ன விஷேசம் ஆனி முடிந்து ஆடி பிறக்கப் போகுது - ஆடி அமாவாசை, ஆடிப்பூரம் இன்னும் என்னென்ன விஷேசம்

சதுரகிரியில் அருளும் ஈசன்

சதுரகிரியில் அருளும் ஈசன்

ஆடி அமாவாசை, சித்திரை மாத பௌர்ணமி தினம், மார்கழி திருவாதிரை நட்சத்திரத்திலும் இந்த சதுரகிரி ஈசனை வணங்க ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். கல் லாலமரம்' என்ற விருட்சத்தின் அடியில் சந்தன மகாலிங்கத்தை ஸ்தாபித்து அன்னை பார்வதி விரதம் இருந்த நாள் ஆடி அமாவாசை.

ஆடி அமாவாசை தரிசனம்

ஆடி அமாவாசை தரிசனம்

இன்றைக்கும் சட்ட நாதமுனி, கோரக்க முனிவர் உள்ளிட்ட பதினெட்டு சித்தர்களும் தபசை கலைத்து, ஒவ்வோர் ஆடி அமாவாசையிலும் இங்குள்ள புனித ஆகாய கங்கை தீர்த்தம், கௌண்டின்ய தீர்த்தம், சந்திர தீர்த்தங்களில் உஷத் காலத்தில் நீராடி சந்தன மகாலிங்கத்தை வணங்குவதாக அகஸ்தியர் நாடி சொல்கிறது.

சிவ சிந்தனை அவசியம்

சிவ சிந்தனை அவசியம்

சதுரகிரி மலை ஏறுவது கடினமானது. மலையே சிவமாக இருப்பதால் பக்தர்கள் காலில் செருப்பு இல்லாமல் ஏறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மலையடிவாரத்தில் ஆசீர்வாத விநாயகரை வணங்கியபின் சிவசிந்தனையுடன் மலை யாத்திரையைத் தொடங்க வேண்டும். செல்லும் வழியில் கோரக்க சித்தர் தவம் செய்த குகையும், பதஞ்சலி முனிவரின் சீடர்கள் பூஜித்த லிங்கமும் உள்ளது.

சித்தர்கள் வாழும் பூமி

சித்தர்கள் வாழும் பூமி

சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்று பட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள். சித்த மருத்துவர்கள் பலர் மூலிகைகளை இங்கிருந்து சேகரித்து செல்கின்றனர், சித்தர்கள் நிறைந்த பூமியை தரிசிக்க ஏராளமானோர் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சதுரகிரிக்கு வந்து செல்கின்றனர்.

ஆடி அமாவாசை பூஜை

ஆடி அமாவாசை பூஜை

கொரோனா தொற்று பரவலை தடுக்க பெரிய ஆலயங்கள் மூடப்பட்டுள்ளன. உள்ளூரில் உள்ள கிராம கோவில்கள் மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆடி அமாவாசை நாளில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சதுரகிரிக்கு வருவார்கள். இந்த ஆண்டு பக்தர்கள் யாரும் சதுரகிரிக்கு வரவேண்டாம் என கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

English summary
Aadi amavasai festival will be canceled in Sathuragiri sundaramahalingam temple due to coronavirus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X