விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எங்க தல அஜித் அரசியலுக்கு வரக்கூடாதா? ராஜேந்திர பாலாஜி தடாலடி கேள்வி

Google Oneindia Tamil News

Recommended Video

    மக்கள் எங்கள் பக்கம்.. எடப்பாடியாரே வெல்வார்.. ராஜேந்திர பாலாஜி

    விருதுநகர்: எங்கள் தல அஜித் அரசியலில் ஈடுபட கூடாதா என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளது பல்வேறு வினாக்களுக்கு விதை தூவிவிட்டது.

    நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று உச்ச நடிகராக உயர்ந்திருக்கிறார். 60 ஆண்டுகள் சினிமாவில் அவர் சாதனை புரிந்ததை கவுரவிக்கும் வகையில் அவருக்கு விழா நடத்தப்பட்டது.

    சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கில் இந்த நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இதில் கமலுடன் நடித்த நடிகர்கள், நடிகைகள், அவரது நண்பர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    ரஜினிகாந்த் பேச்சு

    ரஜினிகாந்த் பேச்சு

    நடிகர் ரஜினிகாந்த்தும் இதில் பங்கேற்றார். ரஜினிகாந்த் விழாவில் பேசுகையில், 2 ஆண்டுகளுக்கு முன்பு, எடப்பாடி பழனிச்சாமி முதல்வராவார் என்று யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் அந்த அற்புதம் நிகழ்ந்து விட்டது. ஆட்சியமைத்தாலும், சில நாட்களில் எடப்பாடி பழனிச்சாமி அரசு கலைந்துவிடும் என்று கூறாதவர்களே கிடையாது. ஆனால் இன்னமும் ஆட்சி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதிசயம் நேற்று நடந்தது, இப்போதும் நடக்கிறது, நாளையும் நடக்கும் என்று பேசினார்.

    அதிமுகவினர் சட்டையை தொட்டால்.. கிழிக்கணும்.. கதவை தட்டினால்.. உடைக்கணும்.. ராஜேந்திர பாலாஜி அதிரடி!அதிமுகவினர் சட்டையை தொட்டால்.. கிழிக்கணும்.. கதவை தட்டினால்.. உடைக்கணும்.. ராஜேந்திர பாலாஜி அதிரடி!

    மாறுபட்ட கருத்து

    மாறுபட்ட கருத்து

    ரஜினிகாந்தின் இந்த பேச்சு எடப்பாடி பழனிச்சாமி திறமையை புகழ்ந்த ஆதரவான பேச்சு என்று, சிலர் கூறுகிறார்கள், சிலரோ, எடப்பாடி பழனிச்சாமியை, கிண்டல் செய்வதுபோல பேசியுள்ளார் என்று விமர்சனம் செய்கிறார்கள். இந்த நிலையில் விருதுநகரில் இன்று மாலை, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    விஸ்வாசமான நடிகர்

    விஸ்வாசமான நடிகர்

    ராஜேந்திர பாலாஜி தனது பேட்டியில் கூறியதாவது: ரஜினி, கமல், விஜய் மட்டும்தான், அரசியலுக்கு வரவேண்டுமா? எங்கள் தல அஜித் வரக்கூடாதா? அதிமுகவுக்கு விசுவாசமாக உள்ள நடிகர்களையும், நாங்கள் களமிறங்குவோம் என்று அதிரடியாக தெரிவித்தார்.

    ரஜினி பேச்சில் தப்பில்லை

    ரஜினி பேச்சில் தப்பில்லை

    மேலும், அவர் கூறுகையில், ரஜினி பேசியதில் தவறில்லை. ஆன்மீகவாதி என்பதால் நாளை எதுவும் நடக்கலாம் என ஆன்மீக கோணத்தில் அவர் பேசியுள்ளார். ரஜினி, பாட்ஷா திரைப்பட ரிலீஸ் நேரத்திலேயே, அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். காலம் கடத்தி விட்டார். அதிமுக ஜெயிக்க சித்து விளையாட்டுகளும் செய்வோம் என்று நான் பேசியது உண்மைதான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    அஜித் நிலைப்பாடு

    அஜித் நிலைப்பாடு

    நடிகர் விஜய் தொடர்ச்சியாக தனது படங்களில், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான டயலாக்குகளை வைக்கிறார், காட்சிகளில் நடிக்கிறார், பொது மேடைகளிலும் அப்படியே பேசுகிறார். ஆனால், அஜித் அப்படி எதுவும் செய்வதில்லை. அவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவராகவும் அறியப்படுபவர். கலைவிழா ஒன்றில், அப்போதைய முதல்வர், கருணாநிதி முன்னிலையில், தன்னை மிரட்டி விழாவுக்கு வர வைத்ததாக கூறியவர் அஜித். இந்த நிலையில், அதிமுகவுக்கு 'விஸ்வாசமான' நட்சத்திரங்களை களமிறக்குவோம் என ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளதும், எங்கள் தல அஜித் அரசியலுக்கு வரக்கூடாதா என கேட்டுள்ளதையும் வைத்து பார்த்தால், அதிமுகவின் துருப்பு சீட்டாக வரும் தேர்தலில் அஜித் முன்னிறுத்தப்படுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால், அமைதி விரும்பியான அஜித், அரசியல் அலையில் சிக்குவாரா என்பது மில்லியன் டாலர் கேள்வி!

    English summary
    Actor Ajith may comes to politics, says minister Rajendra Balaji in Virudhunagar on today over Rajinikanth speech interview.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X