விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எடப்பாடியை முதல்வராக்க வேண்டும் என்பதற்காக நடக்கும் தேர்தல் இது.. மாஜி அமமுக எம்எல்ஏ கொடுத்த ஷாக்

சாத்தூர் முன்னாள் எம்எல்ஏ சுப்பிரமணியனின் பேச்சு சர்ச்சையாகி உள்ளானது

Google Oneindia Tamil News

Recommended Video

    மாஜி அமமுக எம்எல்ஏ கொடுத்த ஷாக்

    விருதுநகர்: "அமைச்சர்கள் மட்டும்தான் சர்ச்சையாக பேசுவாங்களா.. எங்களுக்கும் தெரியும்.. நாங்களும் பேசுவோம்.. பேசிட்டு அதை சமாளிக்கவும் செய்வோம்" என்று நிரூபித்துள்ளார் அமமுக எம்எல்ஏ ஒருவர்.

    எக்கச்சக்க சர்ச்சை, பரபரப்பு பேச்சு, ஏடாகூட பேட்டி என்றாலே சில தமிழக அமைச்சர்கள்தான் நம் கண்முன் வந்து போவார்கள். அந்த அளவுக்கு இந்த 2 வருடத்தில் அவர்களின் பேச்சை கேட்டு தமிழக மக்கள் மிரண்டு அரண்டு கிடக்கிறார்கள்.

    AMMK Candidate speech

    இந்த லிஸ்ட்டில் இப்போது அமமுவும் சேர்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தலில் அமமுக சார்பில் எஸ்.ஜி.சுப்பிரமணியன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    இவர் முன்னாள் எம்எல்ஏ ஆவார். சாத்தூர் பகுதியில் பிரச்சாரத்தை முடித்துகொண்டு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது திடீரென்று, ''அண்ணன் எடப்பாடியை முதல்வராக்க வேண்டும் என்பதற்காகவே நடைபெறும் தேர்தல் இது'' என்றாரே பார்க்கலாம்... அங்கிருந்த தொகுதி மக்கள் உட்பட செய்தியாளர்கள் அனைவருக்குமே தூக்கி வாரிப்போட்டது.

    ஏம்ப்பா... பச்சை பட்டாணியை கொண்டுபோய் தேர்தல் அறிக்கையில போடணும்.. நெட்டிசன்கள் கலகல! ஏம்ப்பா... பச்சை பட்டாணியை கொண்டுபோய் தேர்தல் அறிக்கையில போடணும்.. நெட்டிசன்கள் கலகல!

    உடனே கூட இருந்த நிர்வாகிகள் இந்த தவறை சுட்டிக்காட்டவும் வேட்பாளர் சுதாரித்து பிறகு சமாளித்தார். ஆனால் சாத்தூர் தொகுதி அமமுக வேட்பாளரின் இந்த பேச்சு வைரலாகி வருகிறது. ஒருவேளை ஸ்லீப்பர் செல் இந்த பக்கம் இருக்கிறதோ என்று கிண்டல் கேலிகள் எழ ஆரம்பித்துள்ளதாம். தாய்க்கழகம் ஆச்சே.. என்ன இருந்தாலும் பழைய பாசம் விட்டுப் போகுமா என்ன?

    English summary
    AMMK Sattur Candidate Subramaniyan's Contorversy Speech about CM Edapadi Palanisamy
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X