விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

3 அமைச்சர்கள்.. மொத்தம் 3 கேள்விகள் "சிஏஏவுக்கு ஆதரவா ஏன் சார் ஓட்டு போட்டீங்க".. திணறடித்த பெண்கள்

அமைச்சர்களிடம் சிஏஏ குறித்து இஸ்லாமிய பெண் கேள்வி எழுப்பினார்

Google Oneindia Tamil News

விருதுநகர்: "சிஏஏவுக்கு ஆதரவா ஏன் சார் வாக்களித்தீர்கள்" என்பது உட்பட மொத்தம் 3 கேள்விகளை கேட்டு.. ஒரே நாளில் 3 அமைச்சர்களை அலறவிட்டுள்ளனர் இஸ்லாமிய பெண்கள்.. இதனால் நிகழ்ச்சிகளில் கூட சரியாக பங்கெடுக்காமல் அவசர அவசரமாக தமிழக அமைச்சர்கள் கிளம்பி சென்ற சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை உண்டுபண்ணி உள்ளது!

Recommended Video

    CAA குறித்து கேள்வி ? அமைச்சர்களிடம் கொந்தளித்த இஸ்லாமிய பெண்

    கூட்டுறவுத் துறை சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பெட்ரோல், டீசல் விற்பனை நிலைய திறப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு கலந்துகொண்டு நிலையத்தை திறந்துவைத்து, முதல் விற்பனையை தொடங்கிவைத்தார்.

    இந்நிகழ்வில் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் கலந்துகொண்டார். விழா ஜரூராக நடந்து கொண்டிருந்தது.. அமைச்சர்கள் பேசி முடித்தபின்பு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கும் நிகழ்ச்சியும் தொடங்கியது.. ஒவ்வொருவராக மேடைக்கு சென்று நலத்திட்ட உதவிகளை பெற்று கொண்டிருந்தனர்.

    அமைச்சர்கள்

    அமைச்சர்கள்

    அப்போது, கூட்டுறவு வங்கி கடனாக 8 லட்சம் ரூபாயை அமைச்சர்களிடமிருந்து பெற, முகமது கிலோபர் பாத்திமா எனற் பெண் சென்றார்... அங்கிருந்த அமைச்சர்கள் இருவரையும் பார்த்து, "சிஏஏவுக்கு எதிராக நீங்க ஏன் சார் வாக்களித்தீர்கள்? இஸ்லாமியர்களின் வாக்கு இல்லையென்றால் நீங்கள் ஆட்சிக்கு வந்திருக்க முடியுமா? இந்த நிகழ்ச்சியில் கூட, சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி பற்றியெல்லாம் நீங்கள் ஏன் பேசலை?" என்று டக்டக்கென கேள்விகளை எழுப்பினார்.

    சலசலப்பு

    சலசலப்பு

    இந்த கேள்விகளை அமைச்சர்கள் உட்பட யாருமே எதிர்பார்க்கவில்லை.. அங்கு கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் மத்தியில் இது பெருத்த சலசலப்பையும் உண்டுபண்ணியது.. உடனே அமைச்சர் செல்லூர் ராஜு சுதாரித்து கொண்டு, "அதெல்லாம் ஒன்றும் பாதிப்பு வராது மாமி... உங்களுக்கு இதனால் பாதிப்பு இருக்கா? என்பிஆரில் 3 கேள்விகளுக்கு மத்திய அரசிடம் விதிவிலக்கு கேட்டு இருக்கிறோம்... பாதிப்பு எதுவும் வராது மாமி.. அமைதியாக இருங்க" என்று பொறுமையாக சொல்லி அப்பெண்ணை சமாதானப்படுத்தினார். இதனால் மேடையில் இருந்த அதிமுகவினர் பாத்திமாவை அங்கிருந்து அப்புறப்படுத்துவதிலேயே குறியாக இருந்தனர்.

    தர்மசங்கடம்

    தர்மசங்கடம்

    ஆனாலும் அமைச்சர் தந்த பதில் பாத்திமாவுக்கு திருப்தி அளிக்கவில்லை.. "உடனே அடுத்த கேள்வியை கேட்டார்.. "சிஏஏவுக்கு ஆதரவாக அதிமுக வாக்களிக்காமல் இருந்திருந்தால் இவ்வளவு பெரிய பிரச்சினைகள் வந்திருக்குமா" என்று திரும்ப திரும்ப கேட்டு கொண்டே இருந்தார்... அமைச்சர்களுக்கோ தர்மசங்கடத்தை சொல்ல முடியவில்லை.. ஒருவழியாக அவரை சமாதானப்படுத்திய அமைச்சர்கள், மேடையிலிருந்து அனுப்பிவைத்தனர்.

    முற்றுகை போராட்டம்

    முற்றுகை போராட்டம்

    இந்த 2 அமைச்சர்களுக்கு இப்படி என்றால், அதிராம்பட்டினத்தில் அமைச்சர் ஓஎஸ் மணியன் நிலைமை அதைவிட பரிதாபம்.. தஞ்சை அதிராம்பட்டினம் கல்லூரி விழாவில் அமைச்சர் பேசிக் கொண்டிருந்தார்.. விஷயத்தை கேள்விப்பட்டு இஸ்லாமிய பெருமக்கள் அமைச்சரை சுற்றிக்காண்டு முற்றுகையிட்டனர்.. "சிஏஏவுக்கு ஆதரவாக அதிமுக, எம்பிக்கள் வாக்களித்ததால் அமைச்சர் கல்லூரியை விட்டு உடனே வெளியேற வேண்டும்" என்ற கோஷத்தை ஓ எஸ் மணியன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

    ஓஎஸ் மணியன்

    ஓஎஸ் மணியன்

    ஒரேநேரத்தில், நூற்றுக்கணக்கானோர் கோஷம் எழுப்பியதால் விழாவில் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் ஓ.எஸ்.மணியன் தனது உரையை பாதியில் முடித்துக் கொண்டு விழா அரங்கில் இருந்து வெளியேறி போலீஸ் பாதுகாப்புடன் காரில் புறப்பட்டு சென்றார். இதற்கு பிறகுதான் கல்லூரி நிர்வாகத்தினர் வெளியே வந்து மன்னிப்பு கோரியதையடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

    பரபரப்பு

    பரபரப்பு

    "சிஏஏ-வால் யாருக்கு என்ன பாதிப்பு வந்துவிட்டது சொல்லுங்கள், யாரையாவது ஒருத்தரை காட்டுங்கள்" என்று முதல்வர் அன்று சட்டசபையில் ஆவேசமாக எழுப்பியதற்கு, அநேகமாக ஒரே நாளில் நடந்த இந்த சம்பவமாகத்தான் பதிலடியாக இருக்க முடியும்.. இதனால் அமைச்சர்கள் தங்கள் நிகழ்வுகளை அவசர அவசரமாக முடித்து கொண்டு கிளம்பி உள்ளதும் பரபரப்பை தந்துள்ளது!

    English summary
    caa nrc npr islamic woman question to tn ministers rajendra balaji and sellur raju near virudhunagar
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X