விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நைட் நேரம் வீட்டுக்கு வர்றாங்க.. யாருண்ணே தெரியலை.. பயமா இருக்குண்ணா.. நிர்மலா தேவி ஆடியோ

தனக்கு மிரட்டல் விடுக்கிறார்கள் என்ற நிர்மலாதேவியின் ஆடியோ வைரலாகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    நைட் நேரம் வீட்டுக்கு வர்றாங்க.. பயமா இருக்குண்ணா.. நிர்மலா தேவி ஆடியோ

    அருப்புக்கோட்டை: "நைட் நேரம் வீட்டுக்கு வர்றாங்கண்ணா.. யாருன்னே தெரியல.. எனக்கு பயமா இருக்கு.. கோர்ட்ல அட்டெண்ட் பண்ணினா, ஆசிட் ஊத்திருவேன்னு என்னை மிரட்டறாங்கண்ணா" என்று நிர்மலாதேவி, தனது வக்கீலிடம் பயந்து மிரண்டு போய் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது.

    மாணவிகளை தவறான பாதையில் அழைத்துச்சென்ற வழக்கில் கைதாகி, ஒன்றரை வருஷம் ஜெயிலிலும் அடைக்கப்பட்டார் நிர்மலாதேவி.

    பிறகு நீண்ட நாளாக ஜாமீனுக்கு முயற்சி செய்து கொண்டிருந்தவருக்கு நீதிமன்றம் நேரடியாக தலையிட்டு, ஜாமீனையும் வழங்கியது. இந்த விசாரணை இன்னும் முடியாததால், ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    நிர்மலாதேவி

    நிர்மலாதேவி

    ஜாமீனில் வெளிவந்ததில் இருந்தே நிர்மலாதேவி நடவடிக்கை, நடை, உடை, பாவனையில் நிறைய மாற்றங்கள் காணப்பட்டன. மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, மனநல சிகிச்சையும் எடுத்து கொண்டு வருவதாகவும் சொல்லப்பட்டது.

    டிரைவர் ஸ்டியரிங் பிடிக்க.. 2 இளம் பெண்கள் கியர் மாற்ற.. கடைசில 6 மாதத்துக்கு லைசென்ஸ் போச்சேப்பா!டிரைவர் ஸ்டியரிங் பிடிக்க.. 2 இளம் பெண்கள் கியர் மாற்ற.. கடைசில 6 மாதத்துக்கு லைசென்ஸ் போச்சேப்பா!

    எதிர்வீட்டு கார்

    எதிர்வீட்டு கார்

    சிலதினங்களுக்கு முன்பு தன், தன்வீட்டில் இருந்த பொருட்களை தூக்கி தெருவில் வீசியும், எதிர் வீட்டுக்காரரின் கார் கண்ணாடியை கல்லை தூக்கி போட்டும் உடைத்தும் அட்டகாசம் செய்தார். இந்நிலையில் இன்று மீண்டும் கோர்ட்டில் ஆஜராக வேண்டி உள்ள நிலையில், நேற்றைய தினம் ஒரு ஆடியோ வெளியானது. அதில், நிர்மலாதேவி தனது வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியனிடம் பேசுவதுபோல் அந்த ஆடியோ உள்ளது.

    பயமா இருக்கு

    பயமா இருக்கு

    அதில், "அண்ணா.. எனக்கு வீட்ல இருக்கிறதுக்கு பயமா இருக்குண்ணா.. நான் இப்ப தனியா இருக்கேன்னு சொல்லிட்டு, எல்லாரும் நைட் நேரம் வந்து, கொஞ்சம் பயமுறுத்துற மாதிரி தெரியுது. கதவ திறக்க முயற்சி பண்ணுற மாதிரி தெரியுது.. கோர்ட்ல அட்டென்ட் பண்ணுனின்னா ஆசிட் ஊத்திருவேன்னு சொல்லுறாங்க.. எனக்கு பயமா இருக்குண்ணா.." என்கிறார் நிர்மலாதேவி.

    யார் மிரட்டறது?

    யார் மிரட்டறது?

    இதற்கு வழக்கறிஞர், "என்ன காரணம்? யார் மிரட்டறது? என கேட்க, "ஏதோ.. அமைச்சர் அதுஇதுன்னு சொல்லுறாங்கண்ணா.. என்ன ஏதுன்னு ஒண்ணும் தெரியல" என்கிறார். இதைதவிர அந்த ஆடியோவில் இருவருமே நீண்ட நேரம் பேசுகிறார்கள். நிர்மலாதேவி தன் பயம், பதட்டத்தை, அச்சத்தை வக்கீலிடம் விரிவாக சொல்ல.. "தைரியமா இருங்க.. பத்திரிகைகாரங்க கிட்ட சொல்லலாம், உங்க மனநிலைமை அவங்களுக்கு தெரியும், முதல்ல உங்க உடல்நிலையை சரி பண்ணுங்க.. ஆஸ்பத்திரியில் உடனே சேர்க்க போறேன்" என்கிறார் அவர்.

    அச்ச சூழல்

    அச்ச சூழல்

    இந்த முழு நீள ஆடியோ வெளியாகி பரபரப்பை தந்துள்ளது. ஏற்கனவே நிர்மலாதேவி மனநல சிகிச்சை எடுத்து கொண்டு வருகிறார்... இப்போதும் அச்ச சூழலிலேயே உள்ளதால், மருத்துவமனையில் அனுமதிக்க உள்ளதாக இந்த ஆடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மனநல சிகிச்சை

    மனநல சிகிச்சை

    முதலில் இந்த ஆடியோ உண்மைதானா? பேசியது நிர்மலாதேவி - வக்கீல்தானா என நமக்கு உறுதியாக தெரியவில்லை. ஒருவேளை உண்மையாக இருப்பின், நிர்மலாதேவிக்கு மனநல சிகிச்சை தருவது உடனடி அவசியமாகிறது. அப்படி மருத்துவமனையில் அனுமதிக்கும் பட்சத்தில் இன்றைய தினம் கோரட்டில் ஆஜராக வாய்ப்பில்லை என்றும் தெரிகிறது.

    அமைச்சர் யார்?

    அமைச்சர் யார்?

    மேலும் நிர்மலாதேவி சொன்ன அந்த அமைச்சர் யார்? இவ்வளவு நாள் இல்லாமல், இப்போது ஏன் திடீரென அமைச்சர் பெயரை பயன்படுத்த வேண்டும் என்பதும் விளங்கவில்லை. எதுவாக இருந்தாலும் போலீசாரும், கோர்ட்டும்தான் இதில் தலையிட்டு உண்மை தன்மையை வெளிக் கொணர வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு!

    English summary
    "Someone is threatening me.. I'm afraid" controversy audio over professor nirmala devi
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X