விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மதுரையை போல விருதுநகரில் பரவும் கொரோனா: 57 பகுதிகளில் நடமாட கூட தடை

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று அதிகம் உள்ளதாகக் கண்டறியப்பட்ட 57 பகுதிகளில் மக்கள் நடமாடவும், கடைகளைத் திறக்கவும் ஞாயிறு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

விருதுநகர்: தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை மட்டுமல்லாது மதுரையில் கொரோனா அதிகம் பரவியதால் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது விருதுநகர் மாவட்டத்திலும் தினசரியும் 200க்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பரவி வருவதால் மாவட்டத்தில் 57 பகுதிகளில் மக்கள் நடமாடவும் கடைகளைத் திறக்கவும் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 1,34,226லிருந்து 1,38,470 ஆக உயர்ந்துள்ளது. தென் மாவட்டங்களிலும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. மதுரையை அடுத்து விருதுநகர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

COVID-19: 57 area in Viruthunagar District containment zones collector order

விருதுநகர் மாவட்டத்தில் 2ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கின்றனர். நேற்று பாதிப்பு ஏற்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சிவகாசி, ராஜபாளையம், அருப்புக்கோட்டை, விருதுநகர் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர்.

சிவகாசி சுற்றுவட்டார பகுதியில் மாரனேரி, செங்கமலநாச்சியார்புரம், சேர்வைக்காரன்பட்டி, மருதுபாண்டியர் மேட்டுதெரு, நேஷனல் காலனி, முத்துமாரிநகர், முஸ்லிம் வடக்கு தெரு, சாமிபுரம் காலனி, வடபட்டி, மாதாங்கோவில்பட்டி, ராஜதுரைநகர், பாரதிநகர், பி.எஸ்.கே.நகர் கிழக்கு, காமராஜர் நகர், அண்ணா காலனி, சாட்சியாபுரம், பராசக்தி காலனி, திருத்தங்கல் ஆகிய பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ராஜபாளையம் நகர் பகுதி, நாச்சியார்பட்டி, செட்டியார்பட்டி, முதுக்குடி, கோவிலூர் ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணாபுரம், மம்சாபுரம், பிள்ளையார்நத்தம், முத்துச்சாமிபுரம், வத்திராயிருப்பு, வைத்திலிங்காபுரம் ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அருப்புக்கோட்டை, பாலையம்பட்டி, சின்னபுளியம்பட்டி, சொக்கலிங்காபுரம் ஆத்திப்பட்டி, நரிக்குடி, பந்தல்குடி, திருச்சுழி, வீரசோழன்

சென்னையில் மழைக்காலம் - மாலையில் கனமழை காலையில் சாரலோடு விடிந்ததுசென்னையில் மழைக்காலம் - மாலையில் கனமழை காலையில் சாரலோடு விடிந்தது

ஆகிய பகுதிகளிலும் பாதிப்பு உள்ளது. சாத்தூர் படந்தால் பகுதியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்டம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க இயலாத நிலையில், நோய் தொற்று அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள 57 பகுதிகளில் மக்கள் நடமாடவும், வணிக நிறுவனங்கள், கடைகள் திறக்கவும் மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் ஞாயிறு கிழமை முதல் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

ஆட்சியர் உத்தரவுப்படி ராஜபாளையம் பகுதியில் உள்ள செட்டியார்பட்டி, கலிங்கப்பேரி, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூனாங்குளம், வத்திராயிருப்பு அருகே உள்ள மேலகோட்டையூர், சுந்தரபாண்டியம், கிருஷ்ணன்கோயில், சிவகாசி அருகே உள்ள பூலாவூரணி, ரிசர்வ்லைன், எம்.புதுப்பட்டி, சித்துராஜபுரம், பாறைப்பட்டி, பேராபட்டி, சீதக்காதி தெரு, முஸ்லிம்தெரு, காளியப்பாநகர், சாட்சியாபுரம், வெற்றிநைனார் தெரு, விஸ்வநத்தம் பகுதிகளில் மக்கள் நடமாடவும், கடைகள் திறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று சாத்தூர் அருகே போத்திரெட்டியபட்டி, பங்களாதெரு, முனிசிபல் நீதிமன்ற தெரு, விருதுநகர் அருகே உள்ள ஆமத்தூர், அண்ணாமலை செட்டியார் தெரு, மொன்னி தெரு, முத்துராமன்பட்டி, பர்மா காலனி, லட்சுமி நகர், என்ஜிஓ காலனி, பாண்டியன் நகர், ரயில்வே பீடர் ரோடு, அய்யனார் நகர், சூலக்கரை, ஓ.கோவில்பட்டி, அல்லம்பட்டி, சத்திரரெட்டியபட்டி, மெட்டுக்குண்டு ஆகிய பகுதிகளிலும் கடைகள் திறக்கவும் மக்கள் வெளியில் நடமாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெம்பக்கோட்டை அருகே செல்லம்பட்டி, எதிர்கோட்டை, கே.மடத்துப்பட்டி, பனையடிப்பட்டி, கட்டபொம்மன் தெரு பகுதிகளும் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அருப்புக்கோட்டை சுற்றுவட்டார கிராமங்களில் ஆலடிப்பட்டி, கொப்புசித்தம்பட்டி, வேலாயுதபுரம், திருநகரம், திருமேனிதெரு, வடக்குபட்டி, பொம்மக்கோட்டை, கத்தாளம்பட்டி, இ.பி.காலனி, திருச்சுழி பகுதியில் மிதிலைகுளம், உலக்குடி வீரசோழன், அ.முக்குளம் பகுதிகளிலும் மக்கள் நடமாடவும் கடைகள் திறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    Russia finishes Clinical Trial for Corona Vaccine

    English summary
    57 containment zones across Virudhunagar district has been completely banned for movement of people and commercial activities Collector order.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X