விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடேங்கப்பா.. ஆட்சியைப் பிடிக்கிறாரோ இல்லையோ.. பெரிய கொடி கம்பத்தைப் பிடிச்சுட்டாரே தினகரன்!

Google Oneindia Tamil News

Recommended Video

    123 அடி உயரத்தில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கொடிக்கம்பத்தில் அமமுக கொடி-வீடியோ

    ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அமமுக சார்பில் ஆசியாவிலேயே மிகப்பெரிய 123 அடி உயரத்தில் கொடிக்கம்பத்தில் அமமுக கொடியினை அதன் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஏற்றி வைத்து, நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவின் பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் விளங்கும் என பேசினார்.

    எதையாவது செய்து எப்போதும் லைம்லைட்டில் இருக்க வேண்டும்.. இதுதான் அரசியலின் முதல் பாடம். அதை தினகரன் சரியாக செய்து வருகிறார். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அமமுக சார்பில் ஆசியாவிலேயே மிகப்பெரிய 123 அடி உயரத்தில் கொடிக்கம்பத்தில் அமமுக கொடியினை ஏற்றி வைத்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் .

     dinakaran hoists party flag at 123 feet mast

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணன் கோயில் பகுதியில் அமமுக சார்பில் இந்த கொடிக் கம்பம் நிறுவப்பட்டுள்ளது.

    அங்கு கொடியேற்றி வைத்த பின்னர் தினகரன் பேசுகையில், நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று இந்தியாவின் பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் விளங்க போகிறது. விருதுநகர் மற்றும் தென்காசி பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று எதிரிகளையும், துரோகிகளையும் வீழ்த்த வேண்டும் என்றார் தினகரன்.

     dinakaran hoists party flag at 123 feet mast

    இந்த நிகழ்ச்சியில் ஆண்கள்,பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த கொடிக்கம்பம் குறித்துத்தான் அக்கம் பக்கத்தில் பலத்த பேச்சாக உள்ளது. பலரும் திரண்டு வந்து வேடிக்கை பார்த்துச் செல்கிந்ன்னர்.

     ராகுலை கிண்டல் செய்ய போய் விமர்சனத்தில் சிக்கிய பிரதமர்.. மோடியின் பேச்சால் சர்ச்சை ராகுலை கிண்டல் செய்ய போய் விமர்சனத்தில் சிக்கிய பிரதமர்.. மோடியின் பேச்சால் சர்ச்சை

    English summary
    TTV Dinakaran hoisted the party flag at 123 feet mast near Srivilliputhur.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X