விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்துக்கடவுள்களை அவதூறாக பேசும் திமுக, இந்துக்களின் விரோதிதான்: ராஜேந்திர பாலாஜி

Google Oneindia Tamil News

விருதுநகர்: இந்துக் கடவுள்களை அவதூறாக பேசும் திமுக, இந்துக்களின் விரோதிதான் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.

நேற்று திருநெல்வேலியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின், பாஜகவினர், திராவிட முன்னேற்ற கழகத்தை இந்து விரோத கட்சி என்பது போல் சித்தரித்து பேசி வருவதாக புகார் தெரிவித்தார்.

dmk is a hindu religion enemy : says rajendra balaji

மேலும் தங்கள் கட்சி இந்துக்களுக்கு மட்டுமல்ல எந்த மதத்துக்கும் எதிரான கட்சி இல்லை என்றும் அனைத்து மதத்தினரையும் அரவணைத்து செல்லும் கட்சி என்றும் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் விருதுநகரில் அதிமுகவின் மக்களவை தேர்தல் அலுவலகத்தை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தினகரன் அணியில் இருப்பவர்கள் தவறானவர்கள் என்பதற்கு பெரியகுளம் கதிர்காமு மீது எழுந்துள்ள பாலியல் புகாரே சாட்சி என்று தெரிவித்தார்.

இஸ்லாமிய மக்களின் பாதுகாவலனாக இருப்பேன்.. வேலூர் வேட்பாளர் ஏசி சண்முகம் வாக்குறுதி! இஸ்லாமிய மக்களின் பாதுகாவலனாக இருப்பேன்.. வேலூர் வேட்பாளர் ஏசி சண்முகம் வாக்குறுதி!

இந்துக் கடவுள்களை திமுக, திக போன்ற கட்சிகள் அவதூறாக பேசி வருவதாவும் எனவே திமுகவும், திகவும் இந்துக்களின் விரோதி தான் என்றும் ராஜேந்திர பாலாஜி கடுமையாக விமர்சித்தார்.

English summary
Minister Rajendra Balaji says DMK is a hindu religion enemy because the party Insults hindu gods
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X