விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

போன வாரம் திட்டிட்டு இந்த வாரம் கூட்டணி... வெட்கமில்லாத அதிமுக கூட்டணி... கனிமொழி பேச்சு

Google Oneindia Tamil News

விருதுநகர்: கடந்த வாரம் திட்டிவிட்டு... இப்போது வெட்கமே இல்லாமல் பாஜகவுடன் அதிமுகவினர் கூட்டணி வைத்துள்ளனர் என்று திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார்.

விருதுநகர் பட்டம்புதூரில் திமுகவின் தென்மண்டல மாநாடு நடைபெற்றது. கூட்டத்தில், ராமநாதபுரம், தேனி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திண்டுக்கல் ஆகிய மாவட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் திமுக எம்பி கனிமொழி கலந்து கொண்டார். தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:

சிறந்த கூட்டம்

சிறந்த கூட்டம்

தளபதி ஸ்டாலின் முதல்வராகி விட்டார் என்ற செய்தி தான் தொண்டர்கள் கூட்டத்தை பார்க்கும் போது தெரிகிறது. மிகச் சிறந்த கூட்டததை நாம் கூட்டி இருக்கிறோம்.

பரபரப்பு புதன்.. காலையிலேயே ஸ்டாலினுக்கு போனை போட்ட சுதீஷ்.. திகிலடிக்கும் தேமுதிக அரசியல்!பரபரப்பு புதன்.. காலையிலேயே ஸ்டாலினுக்கு போனை போட்ட சுதீஷ்.. திகிலடிக்கும் தேமுதிக அரசியல்!

மக்கள் விரோத கூட்டணி

மக்கள் விரோத கூட்டணி

சென்னையில் கூட்டணி என்ற பெயரில் ஒரு கூட்டத்தை கூட்டியிருக்கிறார்கள். அது எப்படிப்பட்ட மக்கள் விரோத கூட்டணி என்பதை அறிவீர்கள்.

அடித்துக் கொண்ட கூட்டணி

அடித்துக் கொண்ட கூட்டணி

ஒரு வாரத்துக்கு முன்பாக அடித்துக் கொண்டார்கள். ஆனால் இப்போது கூட்டணி என்று சேர்ந்திருக்கிறார்கள். எதிரணியினரின் கூட்டணி மக்கள் விரோத கூட்டணி.

வெட்கமே இல்லை

வெட்கமே இல்லை

சில வாரங்களுக்கு முன் மத்திய அரசை விமர்சித்தது அதிமுக. ஆனால்... தற்போது வெட்கமே இல்லாமல் தற்போது அவர்களுடனேயே கூட்டணி வைத்துள்ளனர்.

திராணி இல்லாத கூட்டணி

திராணி இல்லாத கூட்டணி

அந்த கூட்டணியில் இருப்பவர்கள் தமிழகத்துக்கு எதிரான திட்டங்களை எதிர்த்து கேள்வி எழுப்பினரா? அவர்களுக்கு திராணி இருந்ததா? மக்களுக்கு எதிரான திட்டங்களுக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுப்பவர் ஸ்டாலின் தான் என்று தெரிகிறது.

முதல்வர் என்ற களிப்பு

முதல்வர் என்ற களிப்பு

இந்த கூட்டத்தை பார்க்கும் போது... வெற்றி விழா கூட்டமாக... தளபதி ஸ்டாலின் முதல்வர் ஆகிவிட்டாரோ என்ற வெற்றி களிப்பாக கூடியிருக்கிறதோ என்று எண்ண தோன்றுகிறது. ஆகவே... வெற்றி என்பது நமக்குதான். இந்த கூட்டத்திலே வெற்றி என்ற உறுதியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பேசினார்.

English summary
DMK MP Kanimozhi has said last week that the admk said that BJP governmnet has nothing to do.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X