விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுக ஆட்சியில் தான் நீர்நிலைகள் பட்டா போடப்பட்டது... சொல்வது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Google Oneindia Tamil News

Recommended Video

    Rajendra Balaji slams dmk | திமுக ஆட்சியில் தான் நீர்நிலைகள் பட்டா போடப்பட்டது: ராஜேந்திர பாலாஜி

    விருதுநகர்: தமிழகத்திலுள்ள நீர்வளத்தை பாழ்படுத்தியது திமுக அரசு தான் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

    விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் தமிழகத்தில் இருந்த நீர்நிலைகள் பட்டா போட்டு வீடுகள் கட்டப்பட்டது என்று புகார் தெரிவித்தார். மேலும், குடிநீர் பிரச்சனை தமிழகத்தில் வராமல் தடுப்பது தான் அதிமுக அரசின் நோக்கம.

    DMK regime that the water levels were dumped says Minister Rajendra Balaji

    தண்ணீர் பிரச்சினையை காரணம் காட்டி பள்ளிகளை மூடப்போவதாக தனியார் பள்ளிகள் அரசை மிரட்டக்கூடாது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத காரணத்தால் ஊராட்சி செயலாளர்கள் குடிநீர் பிரச்சனையை சரிவர கவனிக்காமல் செயற்க்கையான குடிநீர் பஞ்சத்தை உருவாக்கி அரசு மீது பழி போட நினைக்கிறார்கள். மின் மோட்டர் பயன்படுத்தி தண்ணீர் எடுப்பதால் தற்போது நிலவும் தண்ணீர் பஞ்சத்துடன் செயற்கையான தண்ணீர் பஞ்சமும் உருவாகியுள்ளது.

    யோகி ஆதித்யநாத், மோகன் பகவத்தை கடுமையாக சாடிய வாரணாசி பாடகி ஹர்த் கவுர் மீது தேசதுரோக வழக்கு யோகி ஆதித்யநாத், மோகன் பகவத்தை கடுமையாக சாடிய வாரணாசி பாடகி ஹர்த் கவுர் மீது தேசதுரோக வழக்கு

    திமுகவில் உள்ளவர்கள் தமிழ் வாழ்க என்று கூறிவிட்டு, ஆங்கிலத்தில் கையெழுத்து போடுபவர்கள். தண்ணீர் பிரச்சினை தொடர்பாக திமுக அறிவித்துள்ள போராட்டம் என்பது ஒரு கபட நாடகம் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

    முன்னதாக, குடிநீர் பிரச்சனைக்காக ஜூன் 22 முதல் மாவட்ட வாரியாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தண்ணீர் பிரச்சனையை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். உள்ளாட்சித் துறை அமைச்சரின் அக்கறையற்ற தன்மையால் மக்கள் குடிநீரின்றி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    குடிநீர் பஞ்சமே இல்லையென பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். எதிர்க்கட்சிகள் வீண் வதந்திகளை பரப்புவதாக முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க அமைச்சர் முயற்சி செய்கிறார். அமைச்சர் சொல்வது போல் நிலைமை இல்லை. தண்ணீர் பிரச்சனை தலை விரித்தாடுகிறது. எனவே, அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Minister Rajendra Balaji Said that DMK regime that the water levels were dumped
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X