விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்கூல் மட்டும் திறக்க வேண்டாம் தலைவா... மாணவர்களின் குரலுக்கு செவி சாய்த்த முதல்வர்

பள்ளிக்கூடத்தை திறக்க வேண்டாம் தலைவா என்று விருதுநகருக்கு வந்த முதல்வரிடம் பள்ளி மாணவர்கள் கோரிக்கை வைத்தனர். அதைக்கேட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பள்ளிகள் திறப்பை ஒத்தி வைத்துள்ளார்.

Google Oneindia Tamil News

விருதுநகர்: தலைவா... தலைவா... ஸ்கூல் திறக்க வேண்டாம் தலைவா என்று முதல்வர் பழனிச்சாமியிடம் பள்ளி மாணவர்கள் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கைக்கு செவி சாய்த்த முதல்வர், தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Recommended Video

    'ஸ்கூல் மட்டும் திறக்க வேணாம் தலைவா..' முதல்வர் பழனிச்சாமியை பார்த்து கத்திய மாணவர்கள் - வீடியோ

    கொரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. எட்டுமாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தாலும் ஆன்லைன் மூலமாகவும் தொலைக்காட்சிகள் மூலமாகவும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா பரவல் குறைந்து வருவதால் நவம்பர் 16 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பவே, பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

    Dont open the school students request CM Palanisamy

    பெற்றோர்களுக்கு பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப ஆசைதான் இருந்தாலும் கொரோனா அச்சம் அவர்களை யோசிக்க வைத்துள்ளது. 50 சதவிகித பெற்றோர்கள் பள்ளிகளை திறக்கலாம் என்று கூறினாலும் மீதமுள்ள 50 சதவிகித பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க வேண்டாம் ஆன்லைன் வகுப்பே தொடரட்டும் என்று தெரிவித்தனர்.

    உயர்நீதிமன்ற மதுரைக்கிளையும் டிசம்பருக்குப் பிறகு பள்ளிகள் திறக்கலாமே என்று யோசனை தெரிவித்தது. இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக வந்த முதல்வர் பழனிச்சாமியை பள்ளி மாணவர்கள் கூட்டமாக சந்தித்தனர். சாலையில் முதல்வர் தனது காரை நிறுத்தச் சொன்ன முதல்வர் மாணவர்களைப் பார்த்து கையை அசைத்தார்.

    டிடிவி தினகரன் மகள் திருமண நிச்சயத்திற்கு வந்த சொந்தங்கள்... சசிகலா ரிலீசுக்குப் பின் திருமணம்டிடிவி தினகரன் மகள் திருமண நிச்சயத்திற்கு வந்த சொந்தங்கள்... சசிகலா ரிலீசுக்குப் பின் திருமணம்

    முதல்வரை பார்த்த மகிழ்ச்சியில் மாணவர்கள் பலரும் உற்சாக குரல் எழுப்பினர். அதிலும் சில மாணவர்கள் தலைவா... தலைவா...என்று அழைத்து ஸ்கூலை மட்டும் திறந்துடாதீங்க தலைவா என்று சத்தமாக கூறினார்கள். அவர்களின் குரல் முதல்வரின் செவிகளை எட்டியே விட்டது.

    இன்று காலையில் வந்த முதல் அறிவிப்பே பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு என்பதுதான். இந்த செய்தியை பார்த்துக்கொண்டிருக்கும் போதே ஆன்லைன் வகுப்புகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை அடுத்த செய்தி வந்தது. மாணவர்களுக்கு கேட்கவா வேண்டும் போட்றா வெடிய தகிட தகிட என்ற இன்றே தீபாவளியை கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.

    English summary
    School students made a request to Chief Minister Palanisamy not to open the school. Hearing the request, the Chief Minister said that the opening date of schools across Tamil Nadu will be announced later.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X