விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாஜகவுக்கு ஆதரவா வாய்ஸ் கொடுங்க ரஜினி... நடிகை கவுதமி வேண்டுகோள்!

Google Oneindia Tamil News

விருதுநகர்: பா.ஜனதாவை ஆதரிக்க நடிகர் ரஜினிகாந்த் முடிவு செய்ய வேண்டும் என நடிகையும்,பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினருமான கவுதமி கூறினார்.

தமிழகத்தில் பாஜக வளர்ந்துள்ளது. யார் முதுகிலும் ஏறி சவாரி செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை எனவும் கவுதமி தெரிவித்தார்.

 Gautami says Rajinikanth should decide to support the BJP

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் கோவில் முன்பு பா.ஜ.க. சார்பில் "நம்ம ஊரு பொங்கல்" நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினரும், ராஜபாளையம் தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான நடிகை கவுதமி கலந்துகொண்டு பொங்கல் வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்தனர்.

ரஜினி அறிக்கை மீது சிலரது விமர்சனம்.. மன்னிக்கவும் மறக்கவும் முடியவில்லை.. ராகவா லாரன்ஸ் வேதனை ரஜினி அறிக்கை மீது சிலரது விமர்சனம்.. மன்னிக்கவும் மறக்கவும் முடியவில்லை.. ராகவா லாரன்ஸ் வேதனை

பின்னர் பெரிய மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகை கவுதமி நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் பா.ஜ.க. நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. கூட்டணி என்றால் அனைவரும் ஒற்றுமையாக இருந்து இலக்கை அடைய வேண்டும். ராஜபாளையம் தொகுதியில் நான் போட்டியிடுவது குறித்து தற்போது எதுவும் சொல்ல முடியாது.

யார் முதுகிலும் ஏறி சவாரி செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. தேர்தல் வரை எதையும் உறுதியாக சொல்லமுடியாது. நடிகர் ரஜினிகாந்த் பாஜகவை ஆதரிக்க முடிவு செய்ய வேண்டும் என்று கவுதமி கூறினார்.

English summary
The actress Gautami hasa said that actor Rajinikanth should decide to support the BJP
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X