விருதுநகரில் திடீரென பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த கன மழை.. மின் விநியோகம் கட்!
விருதுநகர்: விருதுநகரில் திடீரென பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த கன மழையால் சாலைகளில் ஆறாக மழை நீர் ஓடியது. இதன் காரணமாக பாதுகாப்பு கருதி மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக நிவர் புயல் காரணமாக புயல் காற்றும் மழையும் பெய்து வந்த நிலையில்

விருதுநகரில் கடந்த இரு நாட்களாக மழை ஏதும் பெய்ய வில்லை இந்த நிலையில் காலை முதல் மழைக்கான எந்த அறிகுறியும் இல்லாத நிலையில் திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்ய தொடங்கியது.
சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் சாலைகளில் மழை நீர் ஆறாக ஓடியது பலத்த காற்று வீசியதால் விருதுநகரில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது

மேலும் நகரின் பள்ளமான பகுதிகளில் மழைநீர் முழங்காலுக்கு மேலாக தேங்கி காணப்பட்டது
திடீரென பலத்த பெய்த கன மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்தனர்.