விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நல்ல செய்தி.. சாத்தூர் பெண்ணின் குழந்தைக்கு எச்.ஐ.வி இல்லை.. டெஸ்ட் ரிப்போர்ட்டில் தகவல்!

சாத்தூரில் எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணின் குழந்தைக்கு எச்.ஐ.வி நோய் தொற்று ஏற்படவில்லை என்று மருத்துவ பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

விருதுநகர்: சாத்தூரில் எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணின் குழந்தைக்கு எச்.ஐ.வி நோய் தொற்று ஏற்படவில்லை என்று மருத்துவ பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை சேர்ந்த பெண் கடந்த டிசம்பர் மாதம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் ரத்த சோகைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்தம் தேவைப்பட்ட நிலையில் தானமாக பெறப்பட்ட ரத்தம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் அந்த ரத்தத்தில் எச்ஐவி நோய் தோற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவமனை ஊழியர்கள் போதிய சோதனை செய்யாமல் எச்.ஐ.வி ரத்தத்தை அந்த பெண்ணுக்கு ஏற்றியது கண்டுபிடிக்கப்பட்டது.

மதுபோதையில் நடக்கும் குற்றங்கள்.. அரசை ஏன் பொறுப்பாக்கக் கூடாது... நீதிபதிகள் கேள்விமதுபோதையில் நடக்கும் குற்றங்கள்.. அரசை ஏன் பொறுப்பாக்கக் கூடாது... நீதிபதிகள் கேள்வி

 பலியானார்

பலியானார்

இந்த சம்பவமும் தமிழகம் முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதே சமயம் கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தத்தை தானமாக அளித்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் நடந்தது. விஷம் குடித்த இவர் சிகிச்சை பலனின்றி பலியானார். அவர் மனஉளைச்சல் காரணமாக பலியானார்.

 குழந்தை பிறந்தது

குழந்தை பிறந்தது

இதையடுத்து அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு கடந்த ஜனவரி மாதம் குழந்தை பிறந்தது. கடந்த மார்ச் 4ம் தேதி அந்த குழந்தைக்கு எச்ஐவி தோற்று இருக்கிறதா என்று பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனை முடிவுகள் ஒரு மாதத்திற்குள் அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டது. மதுரை அரசு மருத்துவமனையில் இந்த சோதனை நடந்தது.

 என்ன முடிவு

என்ன முடிவு

இந்த நிலையில் இந்த பெண்ணின் குழந்தைக்கு எந்த விதமான நோய் தொற்றும் இல்லை என்று தற்போது தகவல் வெளியாகி. மருத்துவ பரிசோதனையின் முடிவில் அந்த குழந்தைக்கு எச்.ஐ.வி தொற்று இல்லை. அவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

 என்ன பேசினார்கள்

என்ன பேசினார்கள்

இதுகுறித்து மதுரை அரசு மருத்துவமனை டீன் வனிதா மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குனர் செந்தில்ராஜ் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். அதில், சாத்தூர் பெண்ணின் குழந்தைக்கு எச்.ஐ.வி இல்லை. அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார். மருத்துவ பரிசோதனை முடிவை வெளியிட்டதில் வேண்டும் என்று எந்த விதமான தாமதமும் நடக்கவில்லை, என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

English summary
HIV+ affected Sattur woman's baby hasn't affected by HIV says Madurai Hospital test report.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X