விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சந்திராயன் 2 மூலம் இயற்கையான விண்வெளி ஆய்வு நிலையம் அமைய வாய்ப்பு.. மயில்சாமி அண்ணாதுரை

Google Oneindia Tamil News

ஸ்ரீவில்லிபுத்தூர்: வரும் 22-ம் தேதி விண்ணில் பாய உள்ள சந்திராயன் 2 மூலம், சுற்றுலா மையம் அமைய வாய்ப்புள்ளதாக இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார்.

கடந்த 2008-ம் ஆண்டு அனுப்பப்பட்ட சந்திராயன் நிலவில் நீர் உள்ளது என்பதை கண்டறிந்தது. இதனை அடுத்து மற்ற உலக நாடுகள் அனைத்தும் மீண்டும் நிலவுக்குச் செல்ல வேண்டும் என்ற ஒரு முடிவை எடுக்க, இந்தியா பெரும் உந்துசக்தியாக இருந்தது என்றார் மயில்சாமி அண்ணாதுரை.

In future Private also Opportunity to engage in space exploration.. Mylswamy annadurai

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் பங்கேற்றார் மயில்சாமி அண்ணாதுரை. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் திங்கட்கிழமை விண்ணில் பாய உள்ள சந்திராயன் 2 விண்கலம் நிலவில் இயற்கையான விண்வெளி ஆய்வு நிலையம் அமைய உதவியாக இருக்கும்.

விண்ணில் சுற்றுலா செல்லவும் இது உதவி புரியும். சுமார் 50 ஆண்டுகளுக்கு பின் ஆம்ஸ்ட்ராங் இறங்கிய அதே தென்துருவத்தில், நமது சந்திராயன்-2 விண்கலம் யாருமே இதுவரை யாருமே இறங்கி ஆய்வு செய்யாத இடத்தில் ஆய்வு மேற்கொள்ள இருப்பது மிக முக்கிய தருணம்.

வேன் மீது ஏறி நின்று சுட்டது யார்?.. முதல்வரின் சட்டசபை பேச்சால் புதிய சலசலப்பு வேன் மீது ஏறி நின்று சுட்டது யார்?.. முதல்வரின் சட்டசபை பேச்சால் புதிய சலசலப்பு

இதனால் இந்தியாவை பார்த்து சுமார் 70-க்கும் மேற்பட்ட நாடுகள் தாங்களும் இது போன்ற முயற்சியை செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். இதனால் இந்திய வான்வெளி ஆராய்ச்சி தவிர தனியார் சிலரும் வான்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.

வருங்காலத்தில் தனியார் வான்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டால் இந்திய மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி பயன்படுத்தினால் அவர்கள் ஒரு பெரிய விண்வெளி விஞ்ஞானியாக வர வாய்ப்பு உள்ளது என்றார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி குறித்து பேசிய அவர் கருத்தரங்கம் மற்றும் அறிவியல் கண்காட்சியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு அதற்கு காப்புரிமை பெறுவது, அதனை தொழில் ரீதியாக எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த முடிவுகள் எடுக்கப்படும். இதற்கு தமிழ்நாடு அறிவியல் கழகத்தின் சார்பில் மாணவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும் மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

English summary
Former ISRO chief Mailasamy Annadurai has said that the tourist center is likely to be launched by Chandrayaan 2, which will be launched on May 22.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X