• search
விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

யார் பக்கம் குண்டர்கள்? யார் பக்கம் தொண்டர்கள்.. ராஜேந்திர பாலாஜி பலே பேட்டி!

|
  Rajendra Balaji Speech: யார் பக்கம் குண்டர்கள்? யார் பக்கம் தொண்டர்கள்.. ராஜேந்திர பாலாஜி- வீடியோ

  விருதுநகர்: மே 23-ஆம் தேதி வந்தால் யார் பக்கம் தொண்டர்கள், யார் பக்கம் குண்டர்கள் என தெரியும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

  விருதுநகரில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்க்கும் தொழிலாளர்களிடம் விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்கு தேமுதிக கட்சி சார்பில் போட்டியிடும் அழகர்சாமியும் அவருக்கு ஆதரவாக தமிழக பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியும் வாக்கு சேகரித்தனர்.

  அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்த பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசுகையில்

  எடப்பாடி அண்ட் கம்பெனியில் இருப்பவர்கள் தொண்டர்கள் அல்ல டெண்டர்கள் என்று டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.

  தூத்துக்குடி தொகுதிக்கு என்ன செய்வேன்.. தமிழிசை வெளியிட்ட செம வீடியோ

  குண்டர்கள்

  குண்டர்கள்

  நான் சொல்கிறேன். மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவில் போது யார் பக்கம் தொண்டர்கள் உள்ளார்கள், யார் பக்கம் குண்டர்கள் உள்ளார்கள் என தெரியும். தேர்தல் ஆணையம் அனைத்து இடங்களிலும் அனைத்து கட்சி சார்ந்த நபரிடம் சோதனை நடத்தி வருகிறது.

  நடுநிலை

  நடுநிலை

  உரிய ஆவணங்கள் இருக்கும் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்யவில்லை. காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் கே எஸ் அழகிரி தேர்தல் ஆணையத்தின் மீது வைக்கும் குற்றச்சாட்டு தவறானது. தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட்டு வருகிறது.

  கலர் கலர் தேர்தல் அறிக்கைகள்.. எது பெஸ்ட்.. எது வேஸ்ட்.. வாங்க பார்க்கலாம்!

  குறுக்கிடுதல்

  குறுக்கிடுதல்

  நிதின் கட்காரி பிரச்சார மேடையில் எட்டு வழி சாலை கண்டிப்பாக அமைக்கப்படும் என கூறியதற்கு

  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்க காரணம் மேடையில் கூட்டணி கட்சி தலைவர் பேசும் போது குறுக்கிடுவது தவறு.

  நல்ல முடிவு

  நல்ல முடிவு

  மக்கள் நலனை மனதில் கொண்டு முதல்வர் நல்ல முடிவு செய்வர்.

  அம்மா, சின்னம்மா சிறைக்கு செல்ல காரணம் டிடிவி தினகரன் தான்.

  தன்னை காப்பாற்ற திமுகவுடன் பேரம் பேசியவர் தினகரன். மத்தியில் காங்கிரஸ் கட்சி நடக்கும் போது ஜெயலலிதாவை சிறைக்கு அனுப்பிவிட்டு கட்சியை கைப்பறற நினைத்தவர் டிடிவி தினகரன்.

  தேர்தல் அறிக்கை

  தேர்தல் அறிக்கை

  அதன் காரணமாகவே மறைந்த முதல்வர் ஜெயலலிதா டிடிவி தினகரனை கட்சியை விட்டு வெளியேற்றினார்.

  மக்களை வாழவைக்க ஸ்டாலினிடம் எந்த திட்டமும் இல்லை. திமுகவின் தேர்தல் அறிக்கை ஜீபூம்பா கதையாக உள்ளது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சிறுபிள்ளைத்தனமாக உள்ளது.

  எண்ணம்

  எண்ணம்

  சசிகலாவால் துணை பொதுச்செயலாளர் ஆன டிடிவி தினகரன், சசிகலா பெயரை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தவில்லை.

  சிறையில் உள்ள சசிகலாவை வெளியே கொண்டு வர டிடிவி தினகரன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சசிகலாவை வெளியே கொண்டுவர மறுசீராய்வு மனுவை கொண்டு வந்திருக்கலாம். சசிகலா சிறைக்குள்ளே இருக்க வேண்டும் என்பது டிடிவி தினகரனின் எண்ணமாக உள்ளது.

  விருதுநகர்

  விருதுநகர்

  அவர் சிறையில் இருந்தால்தான் தனக்கு மரியாதையும் மாலையும் கிடைக்கும் என டிடிவி தினகரன் நினைக்கிறார். எந்த கட்சியாக இருந்தாலும் தான் தலைவனாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் டிடிவி தினகரனிடம் உள்ளது என விருதுநகரில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  Minister K.T.Rajendra Balaji says that TTV Dinakaran has to wait upto May 23. then only he knows ADMK cadres are with whom, rowdies are with whom.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more