விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தெய்வீகத்தையும் தேசியத்தையும் பின்பற்றி மோடி நடவடிக்கை.. அமைச்சர் ராஜேந்திரபாலாஜி புகழாரம்

Google Oneindia Tamil News

விருதுநகர்: "தேசியத்தையும் தெய்வீகத்தையும் பின்பற்றி பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புகழாரம் சூட்டி உள்ளார்.. "குற்றம் சொல்பவர்கள் சொல்லிக்கிட்டேதான் இருப்பாங்க.. இப்படி குற்றம் சொல்றவங்க நிச்சயம் நல்லவங்களா இருக்க மாட்டாங்க.. குற்றம் சொல்லும் தாங்கள், நாட்டிற்கு இதுவரைக்கும் என்ன செய்திருக்கிறோம் என்று சிந்திப்பவர்கள், குறை சொல்ல மாட்டார்கள்" என்று கமல்ஹாசன் குறித்த விமர்சனத்துக்கும் அமைச்சர் பதிலடி தந்துள்ளார்.

Recommended Video

    கொரோனாவால் குறைந்த குற்றசெயல்கள்

    சிவகாசி தேரடி வீதியில் அமைக்கப்பட்டுள்ள கிருமி நாசினி நுழைவாயில் கூடத்தை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பார்வையிட்டார். பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது மாவட்ட நிர்வாகம் கொரோனா தடுப்புக்கு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து சொன்னார். பிறகு அவர் சொன்னதாவது

    வல்லரசு நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் கொரோனோ கட்டுப்பாட்டில் உள்ளதற்கு காரணமே மத்திய அரசு எடுத்து வரும் தீவிர நடவடிக்கைதான்... தேசியத்தையும் தெய்வீகத்தையும் பின்பற்றி மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    முத்துராமலிங்க தேவர்

    முத்துராமலிங்க தேவர்

    அதாவது, தேசியத்தையும் தெய்வீகத்தையும் உலகிற்கு பறைசாற்றி அரசியல் நடத்திய முத்துராமலிங்க தேவரின் வழியில் பிரதமர் மோடி, தெய்வீக வழியில் தேசிய உணர்வை ஊட்டுகிறார். கொரோனோ தடுப்பில் பிரதமர், முதல்வரின் நடவடிக்கைகளை கேலி செய்பவர்கள், கிண்டல் செய்து பேசுபவர்கள் எல்லாருமே சமூக விரோதிகள்தான்.. நாட்டிற்கு உதவி செய்யாதவர்கள்தான் இப்படி குறை சொல்வார்கள்.

    வெட்டிக்கதை

    வெட்டிக்கதை

    திண்ணையில் உட்கார்ந்து வெட்டிக்கதை பேசுவர்களின் வீனர்களின் பேச்சை கேட்காமல், நமது சமூக பணியை விடாமல் மேற்கொண்டாலே கொரோனோவை நாட்டில் இருது ஒழிக்கலாம்.. வாடகை வீட்டில் இருப்பவர்களிடம் வாடகை வசூல் செய்யக்கூடாது, வங்கிகள் தவணை தொகையை வசூலிக்கக்கூடாது, என்று அரசு மனிதாபிமான அடிப்படையில் சொல்லி உள்ளது.. இதனை அனைவரும் ஏற்று செயல்படுத்த வேண்டும்" என்றார்.

    கமல்ஹாசன்

    கமல்ஹாசன்

    இதையடுத்து செய்தியாளர்கள், ஊடரங்கு குறித்த கமல்ஹாசன் குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பினர்.. அதற்கு ராஜேந்திர பாலாஜி, "குற்றம் சொல்பவர்கள் சொல்லிக்கிட்டேதான் இருப்பாங்க.. இப்படி குற்றம் சொல்றவங்க நிச்சயம் நல்லவங்களா இருக்க மாட்டாங்க.. குற்றம் சொல்லும் தாங்கள், நாட்டிற்கு இதுவரைக்கும் என்ன செய்திருக்கிறோம் என்று சிந்திப்பவர்கள், குறை சொல்ல மாட்டார்கள்.

    ஒற்றுமை

    ஒற்றுமை

    ஆரம்பத்தில் இந்த ஊரடங்கு சற்று கடினமாகத்தான் பார்க்கப்பட்டது.. ஆனால் நமக்காகத்தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்... அதன்படியே செயல்பட்டும் வருகின்றனர்.. பிரதமரின் அறிவுறுத்தலின் படி ஒற்றுமை ஒளி ஏற்றியதன் மூலம் இந்தியாவின் ஒற்றுமை உலகிற்கு பறைசாற்றப்பட்டிருக்கிறது.

    நடவடிக்கை

    நடவடிக்கை

    உலக நாடுகளில் இதுபோன்ற நேரங்களில் தங்களை சரியான முடிவு எடுக்ககூடியவர்கள் என நிரூபிக்க முடியவில்லை. ஆனால் இந்தியா அதனை நிரூபித்துள்ளது... இதற்கு காரணம் இந்தியாவில் பதவியில் உள்ள தலைவர்களின் கடுமையான உழைப்பும், அவர்களது நேர்மையான நடவடிக்கையும்தான்" என்றார். பிரதமரை புகழ்ந்து அமைச்சர் பேசியது பெரிதும் கவனிக்கப்பட்டு வருகிறது.

    English summary
    lockdown: minister rajendra balaji praises pm modi
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X