விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெண்மையை இழிவுபடுத்தியதற்காக சுப்பையாவுக்கு கொடுக்கப்படும் பரிசா... மாணிக்கம் தாகூர் கேள்வி

Google Oneindia Tamil News

விருதுநகர்: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினராக கீழ்பாக்கம் மற்றும் ராயப்பேட்டை புற்றுநோயியல் அறுவை சிகிச்சை மருத்துவர் சுப்பையா நியமிக்கப்பட்டிருப்பது பெண்மையை இழிவுபடுத்தியதற்காக கொடுக்கப்படும் பரிசா என விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பி உள்ளார்.

தோப்பூரில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி.எம். கட்டோச் நியமிக்கப்பட்டுளளார். அதே போல கிண்டி டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவமனை துணை வேந்தர் டாக்டர் சுதா சேஷயன் மற்றும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை புற்றுநோயியல் அறுவைசிகிச்சைப் பிரிவு மருத்துவர் சுப்பையா ஆகியோர் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினர்களாக மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 Madurai Thoppur AIIMS gets Subbiah Shanmugam as member: Manickam Tagore MP strongly opposes

முன்னதாக மருத்துவர் சுப்பையாவுக்கும் அவர் வசிக்கும் சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் பக்கத்து வீட்டு பெண்ணுக்கும் கார் பார்க்கிங்கில் கார் நிறுத்துவது தொடர்பாக, பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் சுப்பையா அந்த பெண்ணின் வீட்டின் முன்பு சிறுநீர் கழித்ததோடு மட்டுமல்லாமல் பயன்படுத்திய முக கவசங்களை விட்டுச்சென்றதாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக சென்னை போலீசார் வழக்கு பதிவு செய்ததால். இந்தப் பிரச்னை பூதாகாரமாக வெடித்தது. இதையடுத்து, இரு தரப்பு பேச்சு வார்த்தைக்கு பின் அந்த பெண் சுமூகமாக சென்றதாக கூறப்படுகிறது. .

இந்நிலையில் இந்தப் புகாரை கூறி. காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் கேள்வி எழுப்பி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட் பதிவில், விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியின் தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினராக சுப்பையா சண்முகத்தை நியமித்திருப்பது அவர் RSS உறுப்பினர் என்பதற்காகவா அல்லது பெண்மையை இழிவுபடுத்தியதற்காக கொடுக்கப்படும் பரிசா? இது தான் மனுசாஸ்த்திரத்தின் வழி ஆட்சியோ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்

மேலும் அவரை உடனே எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்றும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மருத்துவர் ஹர்ஷ் வர்தனுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

English summary
Manickam Tagore MP strongly opposes Madurai Thoppur AIIMS gets Subbiah Shanmugam as member. he demand kindly withdraw the order and remove Subbiah Shanmugam from the committee. How can Dr Harsh Vardhan justify when the harassment of women is still pending?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X