விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்திக்காரனை உள்ளே வெச்சிக்கிறீங்க.. நம்ம ஆளுங்களை வெளியே போட்டிருக்கீங்க.. டோல்கேட்டில் மொழி போர்!

சாத்தூர் சுங்க சாவடியில் வாக்குவாதம் செய்யும் நபரின் வீடியோ வைரலாகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    விருதுநகர் டோல்கேட்டில் மொழி போர்!-வீடியோ

    விருதுநகர்: "ஏங்க.. இந்திக்காரனை ஃபுல்லா உள்ளே வெச்சிக்கிறீங்க.. நம்ம ஆளுங்களை வெளியே போட்டுக்கிறீங்களே.. அடிமை மாதிரி.. என்னங்க இது" என்று சுங்கசாவடியில் வாகன ஓட்டி ஒருவர் கேள்வி எழுப்பும் வீடியோ வைரலாகிறது.

    சாத்தூர் சுங்கச் சாவடியில் நைட் நேரத்தில் இந்த வாக்குவாதம் நடந்துள்ளது. ஒரு கார் வருகிறது. அந்த காரை மடக்கி சோதனை நடக்கிறது போலும். இது சம்பந்தமாக சுங்கசாவடி ஊழியர்களும், காரின் பின் சீட்டில் இருந்தவர்களும் வாக்குவாதம் செய்து கொள்கிறார்கள்.

    அப்போது கம்ப்ளைன்ட் புக் அதாவது புகார் பதிவேடு தந்து எழுத சொல்கிறார்கள் சுங்கசாவடி ஊழியர்கள். ஆனால், அந்த புகார் பதிவேடு ஆங்கிலத்தில் இருந்தது. இதை பற்றிதான் அவர்கள் வாதம் செய்தனர்.

    கவர்ன்மென்ட்

    கவர்ன்மென்ட்

    "ஏங்க.. நீங்க பாட்டுக்கு இங்கிலீஷ்-ல கம்ப்ளைண்ட் புக் தந்தா எப்படி எழுதறது? தமிழில் இல்லையா?" என்று கேட்கிறார். அதற்கு சாவடி ஊழியர்கள், "ஹலோ.. இது சென்ட்ரல் கவர்ன்மென்ட் சார்.. நாங்களா இப்படி தர்றோம்.. இங்கிலிஷ்ல தான் புக் இருக்கு. அதை எல்லாம் படிச்சி பார்க்காம, பேசாம எழுதிட்டு போங்க" என்கிறார்கள்.

    புத்தகம்

    புத்தகம்

    "அது எப்படி முடியும்? எங்க மொழியில குடுத்தாதானே நாங்க புகார் எழுத முடியும்? இங்கிலீஷ் புத்தகத்தை நீட்டினால் எப்படி எழுதுவோம். இந்த பக்கமாக வர்ற எல்லாருக்குமே இங்கிலீஷ் தெரியும்ன்னு எப்படி நினைக்கிறீங்க? என்னன்னு எழுதுவாங்க? " என்று கார்காரர் கேள்வி எழுப்புகிறார்.

    உள்ளே வராதே

    உள்ளே வராதே

    அந்த நேரம் பார்த்து, ஒரு இந்திக்கார ஊழியர் குறுக்கில் புகுந்து, ஏதோ பேசுகிறார். இதனால் கடுப்பான கார்காரர், "நீ பேசாதே.. எங்க ஆளுங்க கிட்ட நான் பேசிட்டு இருக்கேன். எங்க ஆளுங்களா இருக்க போயிதான் மரியாதை தந்து பேசிட்டு இருக்கேன். நீ இதுக்கு உள்ளே வராதே" என்று சொல்லிவிட்டு, அங்கிருந்த ஊழியர்களிடம், "ஏங்க.. இந்திக்காரனை ஃபுல்லா உள்ளே வெச்சிக்கிறீங்க.. நம்ம ஆளுங்களை வெளியே போட்டுக்கிறீங்களே.. அடிமை மாதிரி.. என்னங்க இது?" என்று கேள்வி எழுப்புகிறார்.

    வாதம்

    வாதம்

    அதற்கு சுங்கசாவடி ஊழியர், "ஏன்.. நீங்களே கான்ட்ராக்ட் எடுங்களேன். அதுல நம்ம ஆட்களை வேலைக்கு வைங்களேன்" என்கிறார். "அப்படி இல்லீங்க.. அந்தந்த மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் தரணும் இல்லையா" என்கிறார். அதற்கு சுங்கசாவடி ஊழியர்கள், "கர்நாடகாவுக்கு போனீங்கன்னா, அந்த மொழியில்தான் எழுதணும்னு சொல்லிட்டால், அங்கே எப்படி எழுதுவீங்க? என்று கேட்கின்றனர். அதற்கு கார்காரர், "நாங்க ஏங்க.. அங்கு போய் எழுதணும்" என்று அந்த வாதம் தொடர்கிறது. இந்த வீடியோதான் வைரலாகிறது.

    English summary
    A Man argues with Sathoor toll gate officials about English and Hindi language. This video goes viral on socials now
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X