விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அன்று பிலிப்ஸ் நிறுவனத்தில் பணி... இன்று சொந்தமாக ஸ்பீக்கர் தயாரிப்பு... குக்கிராமத்தில் அசத்தல்..!

Google Oneindia Tamil News

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் இருந்துகொண்டு தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் ஸ்பீக்கர் தயாரித்து அனுப்பி வருகிறார் மாரியப்பன் என்ற வில்லேஜ் விஞ்ஞானி.

பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய அவர் இன்று ஸ்பீக்கர்களில் இடம்பெற வேண்டிய தொழில்நுட்ப விவரத்தை விரல் நுனியில் வைத்திருக்கிறார்.

கடைகளில் வாங்கும் விலையை விட இரண்டு மடங்கு குறைவாக ஸ்பீக்கர் பாக்ஸ்களை விற்பனை செய்து வருகிறார் இவர்.

முள்ளிச்சேவல்

முள்ளிச்சேவல்

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது முள்ளிச்சேவல் என்ற கிராமம். அங்கு 5 பணியாட்களை பணியமர்த்தி ஸ்பீக்கர் தயாரிப்பு தொழிலை கடந்த 20 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறார் மாரியப்பன். ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை என தென் மாவட்டங்களை சேர்ந்த மைக்செட் உரிமையாளர்களின் செல்லப்பிள்ளையாகவும் விளங்குகிறார் மாரியப்பன். காரணம் அவர்கள் கேட்கும் விதத்தில் ஸ்பீக்கர் பாக்ஸ்களை வடிவமைத்து மனம் கோணாமல் கொடுத்து அனுப்புகிறார்.

உதவியாளர்

உதவியாளர்

சரி இவர் எப்படி இந்த தொழிலுக்கு வந்தார் என்று பார்த்தால், மாரியப்பன் தனது தந்தைக்கு உதவியாக சிறுவயதில் கார்பெண்டர் தொழிலை கவனித்து வந்திருக்கிறார். அப்போது அவர்கள் கடைக்கு வந்து சென்று கொண்டிருந்த தூத்துக்குடியை சேர்ந்த சீனிவாசன் என்பவர், தாம் பணியாற்றிய பிலிப்ஸ் ஆடியோ நிறுவனத்திற்கு மாரியப்பனை உதவியாளராக அழைத்துச் சென்றிருக்கிறார்.

காற்றுப்புகாது

காற்றுப்புகாது

பல ஆண்டுகளாக பிலிப்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய மாரியப்பன் ஸ்பீக்கர் தயாரிப்பின் சூட்சுமங்களையும், அது எப்படி செயல்படுகிறது என்பதையும் கற்றறிந்து முள்ளிச்சேவல் கிராமத்திலேயே ஸ்பீக்கர் தயாரிப்பு தொழிலை தொடங்கியிருக்கிறார். ஸ்பீக்கர் பாக்ஸ்களுக்கு இவர் மாமரம் மற்றும் பலாமரம் கட்டைகளையே பயன்படுத்துகிறார். அதில் தான் காற்றுப்புகாது என்பதால் விலை அதிகமாக இருந்தாலும் இதனை பயன்படுத்துவதாக தெரிவிக்கிறார்.

நேரடி ஆர்டர்

நேரடி ஆர்டர்

ஸ்பீக்கர்களின் விலையை பொறுத்தவரை உதாரணத்துக்கு இரண்டுக்கு பன்னிரெண்டு என்று எடுத்துக்கொண்டால் 11,000 ரூபாய்க்கு இவர் விற்பனை செய்கிறார். இதே ஸ்பீக்கரை வெளியே கடைகளில் வாங்கினால் அதன் விலை ரூ.20,000 வரை இருக்கும். இதனாலேயே மாரியப்பனுக்கு நேரடி ஆர்டர்கள் அதிகமாக இருக்கின்றன.

English summary
Micset Speaker production industry in small village from virudhunagar district
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X