விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அம்மா உயிரோட இல்லை.. மோடி தான் எங்கள் டாடி.. ராஜேந்திர பாலாஜி வைத்த பஞ்ச்!

Google Oneindia Tamil News

Recommended Video

    Rajendra Balaji about Modi | மோடி, இந்தியாவின் டாடி: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

    ஸ்ரீவில்லிப்புத்தூர்: அம்மா இப்போ உயிரோட இல்லை... அம்மா என்ற ஆளுமை இல்லாத இடத்தில் மோடி தான் எங்கள் டாடி... இந்தியாவின் டாடி" என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்

    ஸ்ரீவில்லிப்புத்தூரில் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் சொன்னதாவது:

    Minister Rajendra Balaji Interview


    தேர்தல் வருவதால் பயத்தின் சுரத்தால் ராகுல் காந்தி பிரதமர் மீது குற்றம் சாட்டுகிறார். கடந்த 5 ஆண்டுகளில் எந்த வித குற்றச்சாட்டிற்கும் ஆளாகாத பிரதமாக மோடி உள்ளார். அரசியலுக்காக குற்றம் சாட்டுகின்றனர்.

    தேமுக , அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. பிரச்சனை இல்லை. வெற்றியின் இலக்கை நோக்கி அதிமுக சென்று கொண்டிருக்கிறது. டிடிவி தினகரன் குக்கர் சின்னத்திற்கு தான் மேல் முறையீடு செய்ய வேண்டும். அவருக்கும், இரட்டை இலைக்கும் என்ன சம்பந்தம்? இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிச்சாமியிடம் பத்திரமாக உள்ளது" என்றார்.

    Also Read | அயோத்தி விவகாரம்.. மத்தியஸ்த குழு விசாரணை நடைமுறை என்ன?

    இதையடுத்து, ஜெயலலிதா இருக்கும் போது பாஜக உடன் கூட்டணி வைக்காத நிலையில் தற்போது நெருக்கடியின் காரணமாக கூட்டணி வைத்துள்ளீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, "அம்மா என்ற ஆளுமை இல்லாத இடத்தில் மோடி தான் எங்கள் டாடி. இந்தியாவின் டாடி.

    மோடி பிரதமராக வர கூடாது என்பதற்காக அம்மா எதிர்க்கவில்லை. மோடி மீது அம்மா அவர்கள் நல்ல மரியாதை வைத்திருந்தார்கள். சகோதரர் உணர்வோடு பழகி இருந்தார். அதிமுகவில் மதவாதத்திற்கு வேலை இல்லை. சிறுபான்மையினருக்கு நாங்கள் பாதுகாவலர்கள். அவர்களுக்கு எந்த பிரச்சனையும் வராது" என்று அமைச்சர் பதிலளித்தார்.

    English summary
    TN Minister Rajendra Balaji says PM Modi is our Daddy"
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X