விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தினகரனே திமுகவுக்கு சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.. பரபரப்பு விளக்கம் அளித்த அமைச்சர்

Google Oneindia Tamil News

விருதுநகர்: டிடிவி தினகரனே விரைவில் திமுகவுக்கு சென்றாலும் சென்றுவிடுவார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார் சசிகலா. ஒரு மாதம் கழித்து சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா கைது செய்யப்பட்டதை அடுத்து அதிமுகவை டிடிவி தினகரன் தனது கட்டுக்குள் வைத்திருந்தார்.

இந்த நிலையில் தினகரனையும் சசிகலாவையும் முதல்வர் எடப்பாடியும் அமைச்சர் பெருமக்களும் புறக்கணிக்கத் தொடங்கினர். இதனிடையே ஹவாலா வழக்கில் தினகரன் திகார் சிறைக்கு சென்றார். இந்த நேரத்தில் அவரை மொத்தமாக அதிமுகவினர் புறக்கணித்தனர்.

மண்ணச்சநல்லூர், முசிறி உள்ளிட்ட பகுதிகளில் ஒன்றரை லட்சம் கேபிள் இணைப்புகள் திடீரென துண்டிப்புமண்ணச்சநல்லூர், முசிறி உள்ளிட்ட பகுதிகளில் ஒன்றரை லட்சம் கேபிள் இணைப்புகள் திடீரென துண்டிப்பு

அமமுக கட்சி

அமமுக கட்சி

இதையடுத்து தினகரன் ஜாமீனில் வெளியே வந்து தனது ஆதரவு எம்எல்ஏக்களின் துணையோடு ஆர் கே நகர் தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவானார். பின்னர் அமமுக என்ற கட்சியை தொடங்கினார். இந்த நிலையில் சுயேச்சையாக ஆர் கே நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றதால் அவருக்கு நிச்சயம் நல்ல எதிர்காலம் உண்டு என ஆதரவாளர்கள் நம்பினர்.

செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

அத்தோடு நமக்கும் பதவி, அதிகாரம் கிடைக்கும் என கருதினர். இதையடுத்து அவர் தொடங்கிய கட்சியில் ஏராளமானோர் இணைந்தனர். இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தல், தமிழக சட்டசபை இடைத்தேர்தல்கள் தொடங்குவதற்கு முன்பாகவே அவரது கட்சியிலிந்து விலகி திமுகவில் இணைந்தார் செந்தில் பாலாஜி.

திமுகவில் இணைப்பு

திமுகவில் இணைப்பு

பின்னர் நாடாளுமன்றத் தேர்தல், சட்டசபை இடைத்தேர்தல்களில் தினகரனை மக்கள் ஏற்கவில்லை. இதனால் அவரது கட்சி வேட்பாளர்கள் படுதோல்வியை தழுவினர். இதையடுத்து தினகரனை திட்டும்படியான ஆடியோ வெளியானதை அடுத்து தங்கதமிழ்ச் செல்வன் அக்கட்சியிலிருந்து வெளியேறி திமுகவில் இணைந்தார்.

வீடியோ

வீடியோ

அது போல் புதுவை அமமுகவே கலைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் தினகரனின் தீவிர ஆதரவாளரான புகழேந்தியும் தினகரனை விமர்சித்து பேசும் வீடியோ வெளியானதால் அவரும் அக்கட்சியிலிருந்து விலகலாம் என தெரிகிறது.

திமுகவில் இணைந்தாலும்...

திமுகவில் இணைந்தாலும்...

இந்த நிலையில் இதுகுறித்து விருதுநகரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசுகையில் தினகரனின் கட்சிக்கு மக்கள் யாரும் ஆதரவு தரவில்லை. தினகரன் எம்ஜிஆர் ரசிகர் அல்ல. அவர் சிவாஜி ரசிகர் என்பதால் அங்கிருந்து விலகி திமுகவில் இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றார்.

English summary
Minister Rajendra Balaji says that TTV Dinakaran will soon join in DMK, because he is not MGR fan, he is Shivaji fan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X