விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்ன, கலவரத்த தூண்டுறீங்களா.. கல்ல விட்டு அடிப்பான் அதிமுகக்காரன்.. அனல் கக்கிய ராஜேந்திர பாலாஜி

Google Oneindia Tamil News

விருதுநகர்: தமிழகத்தில் கலவரத்தை திமுக தூண்டுவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.

ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சுந்தரபாண்டியம் பேரூராட்சியில் நடந்தது.
சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார். அவர் பேசிகையில் அனல் தெறித்தது.

தமிழகத்தில் நடப்பது ஏழை- எளிய மக்கள் ஆட்சி. எளியோரை பற்றி சிந்தித்து தமிழக முதல்வர் எடப்பாடியார் நல்ல பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். ஜெயலலிதா விட்டுச்சென்ற பணிகளை எடப்படியார் நிறைவேற்றி வருகிறார்.

கலவரம்

கலவரம்

எடப்பாடியார் இருக்கும் வரை, அவர்தான் தமிழகத்தின் நிரந்தர முதல்வராக இருப்பார். தமிழகத்தில் அதிமுகவின் வளர்ச்சியை திமுகவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால் திமுக பல்வேறு போராட்டங்களையும், கலவரங்களையும் தூண்டி விட்டு, அதன் வழியே, ஆட்சிக்கு வர துடிக்கிறது. இப்போது முஸ்லீம்களை தூண்டி விட்டு திமுகவினர் அரசியல் செய்கிறார்கள்.

இரும்புக்கரம்

இரும்புக்கரம்

மதக்கலவரத்தை தூண்டி விடுபவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் கூறியதை நினைவுபடுத்துகிறேன். ஒவ்வொருவருக்கும் அவர்களின் உரிமையை கேட்க உரிமை இருக்கிறது உண்மை. ஆனால் கலவரம் செய்ய யாருக்கும் உரிமை கிடையாது என்று நான் சொல்லிக்கொள்கிறேன்.

ஸ்டாலின் வெளிநடப்பு செய்தார்

ஸ்டாலின் வெளிநடப்பு செய்தார்

குடியுரிமை சட்டத்தினால் ஒரு இஸ்லாமியர்கள் யாராவது பாதிக்கப்பட்டு இருந்தால் கூறுங்கள் நான் நடவடிக்கை எடுக்கின்றேன் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் கூற முடியாமல் மு.க.ஸ்டாலின் வெளிநடப்பு செய்து சென்று விட்டார். உண்மை இருந்தால் அங்கேயே பதில் சொல்லியிருக்க வேண்டும்.

கல்வீச்சு

கல்வீச்சு

அதிமுகவினர் காந்தி கையை பிடித்து வந்தவர்கள் கிடையாது. எம்ஜிஆர் கையை பிடித்து வந்தவர்கள். எனவே, வீரத்தோடு தான் இருப்போம். அதிமுகக்காரன், விசில் அடிப்பான், சவுண்டும் விடுவான், யாராவது ஓவரா பேசுனா கல்லெடுத்தும் எறிவான். காங்கிரஸ்காரர்கள்தான் அமைதியாக உட்கார்ந்து இருப்பார்கள். இவ்வாறு ராஜேந்திர பாலாஜி பேசினார்.

English summary
Minister Rajendra Balaji has accused DMK of inciting riots in Tamil Nadu. It is true that everyone has the right to ask for their rights. But nobody has the right to riot, he added.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X