விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அனைத்து முயற்சியும் வீணானது.. பாஜக உத்தேச பட்டியலை பார்த்து ராஜேந்திர பாலாஜி அதிர்ச்சி!

Google Oneindia Tamil News

விருதுநகர்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு கடந்த முறை எம்எல்ஏ ஆனவர். அவர் இந்த முறை நிற்க ஆசைப்பட்டதொகுதி ராஜபாளையமாம். ஆனால் அந்த தொகுதியில் பாஜக சார்பில் கௌதமி போட்டியிடப்போவதாக கூறப்படுகிறது. நேற்று வெளியான பாஜகவின் உத்தேச பட்டியலை பார்த்து ராஜேந்திர பாலாஜி அதிர்ச்சி அடைந்துள்ளாராம்.

Recommended Video

    சென்னை: பாஜக உத்தேச வேட்பாளர்கள் லிஸ்ட்: ஜெர்க்கான ராஜேந்திர பாலாஜி!

    தற்போதைய தொகுதியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளதால் தொகுதி மாறி போட்டியிட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விரும்பியதாகவும், கட்சித் தலைமை மறுப்பு தெரிவித்ததுடன் அவர் கேட்ட மாற்று தொகுதியை பாஜகவுக்கு தள்ளிவிட்டுவிட்டது என்றும் கிசுகிசுக்கள் பரவி வருகின்றன.

    உறுதியானது.. திமுக கூட்டணியில் காங்.க்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு..குமரி லோக்சபா தொகுதியும் ஒதுக்கீடு உறுதியானது.. திமுக கூட்டணியில் காங்.க்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு..குமரி லோக்சபா தொகுதியும் ஒதுக்கீடு

    தமிழக அமைச்சர்களில் அதிரடி பேச்சுக்களால் அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்தியவர் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இவர் மனதில் தோன்றியதை மறைக்காமல் தடாலடியாக பேசுவார். தனியார் பால் நிறுவனங்கள் குறித்து இவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நீதிமன்றம் வரை சென்றது.

    எடப்பாடிக்கு பாராட்டு

    எடப்பாடிக்கு பாராட்டு

    இதேபோல் மோடி எங்கள் டாடி என்று கூறியவர் ராஜேந்திர பாலாஜி. முதல்வர் எடப்பாடியை அதிகம் புகழ்ந்த அமைச்சர்களில் இவர் தான் முதன்மையானவர். இதேபோல் ஓபிஎஸ்சையும் சிறந்த நிர்வாகி என்று அடிக்கடி புகழ்ந்தவர்.

    ஸ்டாலின் தாக்கு

    ஸ்டாலின் தாக்கு

    இவரது பேச்சு மற்றும் நடவடிக்கைகளை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தன. ஸ்டாலின் கூட ஒரு கட்டத்தில் ராஜேந்திர பாலாஜியை கடுமையாக வார்த்தையால் கிண்டல் செய்தார். அந்த அளவிற்கு எதிர்க்கட்சிகளை விமர்சித்தவர் ராஜேந்திர பாலாஜி.

    தொகுதி மாற விருப்பம்

    தொகுதி மாற விருப்பம்

    ராஜேந்திர பாலாஜிக்கும் , அவரது மாவட்டத்தைச் சேர்ந்த எம்எல்ஏ ராஜவர்மனுக்கும் இடையே கடந்த ஐந்து வருடங்களில் அடிக்கடி மோதல் ஏற்பட்டது. இது சாதி மோதலாகவும் மாறும் சூழ்நிலை கூடு ஏற்பட்டது. இதற்கிடையே சிவகாசியில் இருந்து ராஜபாளையத்திற்கு மாற ராஜேந்திர பாலாஜி விரும்பினாராம்,

    கௌதமி

    கௌதமி

    இதற்காக அதிமுக மேலிடத்தில் பல முயற்சிகளை செய்தாராம் ஆனால், அவரது முயற்சிக்கு ஆரம்பத்திலேயே முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முட்டுக்கட்டை போட்டு விட்டாராம். பழைய தொகுதியான சிவகாசியிலேயே போட்டியிட வேண்டும் என்றும் கூறிவிட்டாராம். அதோடு, ராஜபாளையத்தை பாஜகவுக்கு தள்ளிவிட்டாராம். கௌதமி தான் ராஜபாளையம் தொகுதி பாஜக வேட்பாளர் என்ற தகவல் நேற்று உத்தேச பட்டியல் மூலம் தெரியவந்தது. இதை பார்த்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அதிர்ச்சியில் உள்ளாராம்.

    English summary
    Minister Rajendra Balaji wanted to shift from Sivakasi constituency to Rajapalayam but was not available. The information that Gautami is the BJP candidate for Rajapalayam constituency was revealed through the proposed list yesterday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X