விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முருகன், கருப்பசாமிக்கு நிபந்தனை ஜாமீ்ன்... வெளிநாடு போக தடை

Google Oneindia Tamil News

Recommended Video

    மீண்டும் காக்கை படத்தை பதிவிட்ட கிரண்பேடி | முருகன்,கருப்பசாமிக்கு நிபந்தனை ஜாமீ்ன்..வீடியோ

    ஸ்ரீவில்லிபுத்தூர்: நிர்மலா தேவி வழக்கில் கைதான உதவி பேராசிரியர் முருகன், பிஎச்டி ஸ்காலர் கருப்பசாமி ஆகியோருக்கு ஸ்ரீிவில்லிபுத்தூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீ்ன் அளித்து உத்தரவிட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டையில் உள்ள தேவாங்கர் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்றதற்கான வழக்கில் கைது செய்யப்பட்டவர் பேராசிரியை நிர்மலாதேவி.

    murugan and karuppasamy get bail from court

    இவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். 3 பேரும் ஜாமீன் கேட்டு கோர்ட்டுகளை நாடியும் கிடைக்கவில்ல.

    இந்த நிலையில் முருகன், கருப்பசாமி ஆகிய இருவரும் உச்சநீதிமன்றத்தை அணுகி ஜாமீன் கோரினர். இதையடுத்து உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதைத் தொடர்ந்துஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நடைபெற்று வரும் நிலையில் நீதிபதி (பொறுப்பு) சுமதி சாய்பிரியா தலா ரூ.75000 சொத்து மதிப்புள்ள 4 நபர்கள் ஜாமீன்தாரர்களாக ஏற்றுக்கொண்டு பினையில் வெளிவர உத்தரவிட்டார்.

    பினையில் சிறைக்கு வெளியில் இருக்கும் காலத்தில் முருகன், கருப்பசாமி இருவரும் வெளிநாடு செல்லக்கூடாது, சாட்சிகளை கலைக்ககூடாது, விசாரனையின் போது குறிப்பிட்ட தேதியில் நீதிமன்றத்தில் தவறாமல் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனைகளை நீதிபதி விதித்தார்.

    இதையடுத்து முருகனும், கருப்பசாமியும் ஜாமீனில் விடுதலையாகினர். அதேசயம் நிர்மலா தேவி தொடர்ந்து சிறையில் அடைபட்டுக் கிடக்கிறார். அவரும் உச்சநீதிமன்றம் வரை போய் போராடி ஜாமீன் வாங்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    English summary
    Both Murugan and Karuppasamy have been granted bail by Srivilliputhur mahila court.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X