விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உனக்கு என்ன அவசரம் இப்போ.. வேணும்னா.. அதிர வைத்த கணவர்.. ஷாக்கான மனைவி.. போலீஸில் புகார்!

முதலிரவுக்கு வர மறுத்த கணவன் மீது மனைவி புகார் அளித்துள்ளார்

Google Oneindia Tamil News

விருதுநகர்: "முதலிரவுக்கு உனக்கு என்ன அவசரம்? வேணும்ன்னா என் அப்பாவுடன் ஜாலியா இருந்துக்கோ" என்று திமிராக பதில் சொல்ல மாப்பிள்ளை மீது புதுமனைவி போலீசில் புகார் தந்துள்ளார்.

விருதுநகர், கட்டையாபுரத்தை சேர்ந்தவர் பழனிவேல் (எ) சரவணன். இவருக்கும், நெல்லையை சேர்ந்த ராதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் கடந்த ஜுன் மாதம் 6-ம் தேதி கல்யாணம் நடந்தது.

newly married wife complaint against husband near virudhunagar

கல்யாணத்துக்கு 11 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் தரப்பட்டன. கல்யாணம் சீரும் சிறப்புமாக நடந்து முடிந்தது. அன்றைய தினம் இரவு ஆயிரம் கனவுகளுடன் மணமகள் பூரிப்பில் இருந்தார்.. ஆனால், இருவருக்கும் முதலிரவு நடக்கவில்லை.

மாமனார் மூக்காண்டி, மாமியார் சண்முகசுந்தரி, மற்றும் கணவனின் சகோதரிகள் எல்லாரும் சேர்ந்து ராதாவிடம் வந்து, இன்றைக்கு முதலிரவு உங்களுக்கு நடக்காது என்று சொன்னார்கள். இதைக் கேட்டு அதிர்ந்த ராதா, பெற்றோரிடம் இதை சொல்லவும், அவர்களும் அதிர்ச்சி அடைந்து சரவணனை தனியாக கூப்பிட்டு விசாரித்தனர்.

 2 குழந்தைகளை புடவையில் தூக்கிட்டு.. இன்னொரு புடவையில் தானும் தொங்கிய தாய்.. காரணம்.. கணவரின் குடி! 2 குழந்தைகளை புடவையில் தூக்கிட்டு.. இன்னொரு புடவையில் தானும் தொங்கிய தாய்.. காரணம்.. கணவரின் குடி!

அதற்கு மாப்பிள்ளை, "எத்தனையோ பேருக்கு வருஷக்கணக்காக முதலிரவு நடக்காமல் இருக்கிறது.. அதுக்கு என்ன அவசரம்? என் அப்பா மூக்காண்டி ரொம்ப தொந்தரவு பண்ணவேதான் உன்னை கல்யாணம் செய்துக்கிட்டேன். உனக்கு வேண்டுமானால் அவருடன் உல்லாசமாக இருந்துக்கோ.. என்னை தொந்தரவு செய்யாதே" என்று சொல்லியதுடன், ராதாவுக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

இதுகுறித்து விருதுநகர் அனைத்து மகளிர் போலீசில் ராதா புகார் செய்யவும், புதுமாப்பிள்ளை சரவணன் உட்பட 8 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

English summary
newly married wife complaint against husband over first night issue near virudhunagar
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X