நிர்மலா தேவி வழக்கு.. அக்டோபர் 4ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
ஸ்ரீவில்லிபுத்தூர்: கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கிலிருந்து விரைவில் விடுதலையாக கோரி பேராசிரியர் நிர்மலாதேவி 2 வது முறையாக மொட்டையடித்தபடி ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தொலைபேசியில் தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளார் பேராசிரியர் நிர்மலா தேவி.

இவர் தவிர இந்த வழக்கில் கைதான உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் ஜாமீனில் விடுதலையாகி வெளியே உள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வருகிறது.
புதுச்சேரி கோரக் கொலை.. பாஜக தலைவர் சோழன் அதிரடி கைது.. டாப் 10 ரவுடிகளில் ஒருவர்
இன்று இந்த வழக்கு கோர்ட்டுக்கு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து 3 பேரும் நேரில் ஆஜரானார்கள். ஆனால் அவர்களது வக்கீல்கள் யாரும் வரவில்லை. வழக்கை விசாரித்த நீதிபதி பரிமளா அடுத்த மாதம் அக்டோபர் 4 ஆம் தேதி 3 பேரும் கண்டிப்பாக வழக்கறிஞர்களுடன் ஆஜராக உத்தரவிட்டார்.
வழக்கிலிருந்து விரைவில் விடுதலையாக கோரி பேராசிரியர் நிர்மலா தேவி ஏற்கனவே மொட்டை அடித்திருந்தார். இப்போது 2 வது முறையாக மொட்டையடித்தபடி நீதிமன்றத்தில் ஆஜரானார்.