விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விறுவிறுப்பான கட்டத்தில் நிர்மலா தேவி வழக்கு.. 9ம் தேதி முதல் விசாரணை தொடங்கும்

Google Oneindia Tamil News

Recommended Video

    நிர்மலா தேவி வழக்கு.. 9ம் தேதி முதல் விசாரணை தொடங்கும்-வீடியோ

    ஸ்ரீவில்லிபுத்தூர்: அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு வழி நடத்த முயன்ற விவகாரத்தில் பேராசிரியர் நிர்மலா தேவி மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ள பேராசிரியர் நிர்மலா தேவி உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகிய 3 பேரும் இன்று வழக்கறிஞர்களுடன் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

    nirmala devi case to be heared from october 9

    இவ்வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசாரால் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அதன் நகல் 3 பேருக்கும் வழங்கப்பட்டது. இந்நிலையில் 3 பேர் மீதும் நீதி மன்றத்தின் சார்பில் இன்று குற்றச்சாட்டு வரைவு (CHARGE FRAME ) பதிவு செய்யப்பட இருந்த நிலையில் 2 வது குற்றவாளியான உதவிப் பேராசிரியர் முருகன் தனது மனைவியின் பிரசவத்திற்காக மருத்துவமனை சென்றிருப்பதால் ஆஜராகாவில்லை.

    nirmala devi case to be heared from october 9

    இதையடுத்து வழக்கு விசாரணையை ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி பரிமளா வரும் 9ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    வரும் 9ஆம் தேதி குற்றவாளிகள் 3 பேர் மீதும் நீதிமன்றத்தின் சார்பில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற உள்ளது.

    குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட சூழலில் நிர்மலா தேவியின் வழக்கு வேகமெடுக்க தொடங்கி இருப்பதாகவும் நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ராத்திரியில் சித்திரவதை.. குடி.. உருப்படாத கணவர்.. நண்பருடன் சேர்ந்து ஆற்றில் தள்ளி விட்ட செல்வி!ராத்திரியில் சித்திரவதை.. குடி.. உருப்படாத கணவர்.. நண்பருடன் சேர்ந்து ஆற்றில் தள்ளி விட்ட செல்வி!

    English summary
    Nirmala Devi case will be having fast hearing from October 9 says court sources.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X