விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மிரட்டி வாக்குமூலம்.. இதில் அரசியல் சதி இருக்கு.. கோர்ட் வளாகத்தில் மவுனத்தை கலைத்த நிர்மலாதேவி

ஸ்ரீவில்லிப்புத்தூர் கோர்ட் வளாகத்தில் நிர்மலாதேவி பேட்டி அளித்தார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    என்னை மிரட்டி வாக்குமூலம் வாங்கினார்கள்.. மவுனத்தை கலைத்த நிர்மலாதேவி-வீடியோ

    ஸ்ரீவில்லிப்புத்தூர்: "ஜெயிலில் என்னை மிரட்டிதான் வாக்குமூலம் வாங்கினார்கள், எனக்கு ஜாமீன் தருவதில் என்னமோ அரசியல் சதி இருக்கு" என்று நிர்மலாதேவி கோர்ட் வாசலிலேயே எல்லார் முன்னிலையிலும் பகிரங்கமாக தெரிவித்த பேட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    மதுரையில், மருத்துவ கல்லூரி மாணவிகளை தவறான வழிக்கு பேராசிரியை நிர்மலாதேவி அழைத்து செல்ல முற்பட்ட விவகாரம் தொடர்பாக ஒரு ஆடியோ வெளியானது.

    இதனால் தமிழக மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து இது சம்பந்தமாக நடத்தப்பட்ட விசாரணையில் அருப்புக்கோட்டை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு மதுரை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    நிர்மலா தேவி

    நிர்மலா தேவி

    இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிப்புத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஒவ்வொருமுறையும் விசாரணைக்காக நிர்மலாதேவி அழைத்து வரப்படும் போதெல்லாம், எந்தவித கருத்தையும் கூறாமல் இருந்தார்.

    கணவர் பேசவே இல்லை

    கணவர் பேசவே இல்லை

    ஒரேஒருமுறை மட்டும் "என் கணவர் என்னை வந்து பார்க்காமலேயே இருக்கிறார். வழக்கு விஷயமாக பேச வேண்டும், ஆனால் குடும்பத்தினர் என்னை பார்க்க வரவே இல்லை" என்று மட்டும் சொல்லி வந்தார். ஆனால் வழக்கு விவரங்களை குறித்து எந்த பதிலும் சொல்லாமல் தவிர்த்து வந்தார்.

    கோர்ட் வளாகம்

    கோர்ட் வளாகம்

    இந்நிலையில் இன்று மீண்டும் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நிர்மலாதேவி ஆஜரானார். பின்னர் இந்த வழக்கின் விசாரணையை பிப்ரவரி 14-ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, கோர்ட் வளாகத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய நிர்மலாதேவி பேசினார்.

    அரசியல் சதி

    அரசியல் சதி

    கைது செய்யப்பட்டு 220 நாட்கள் ஆன பிறகு முதல்முறையாக நிர்மலாதேவி தன் தரப்பு கருத்தினை வெளிப்படுத்தினார். "எனக்கு மிரட்டல்கள் இருக்கிறது. சிபிசிஐடி தயார் செய்த வாக்குமூலங்கள் எல்லாம் போலியானவை. எனக்கு ஜாமீன் வழங்காததற்கு மிகப்பெரிய அரசியல் சதியே இருக்கிறது" என்றார்.

    பரபரப்பு பேட்டி

    பரபரப்பு பேட்டி

    ஆளுநர் மாளிகைக்கு 4 முறை சென்றதாக நிர்மலாதேவி ஏற்கனவே பரபரப்பான வாக்குமூலத்தை அளித்திருந்த நிலையில், இன்று அவை எல்லாமே மிரட்டி வாங்கப்பட்டது என்று தெரிவித்திருப்பது மேலும் குழப்பத்தையும், திருப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    In the Court premises Nirmala Devi interview, she said that there is a political background in her bail.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X