விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மகள்களாகத்தான் பார்த்தேன்.. தப்பு பண்ணலை.. மயங்கி விழும் முன் நிர்மலா தேவி உருக்கம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    நீதிமன்றத்தில் மயங்கி விழுந்த நிர்மலா தேவி-வீடியோ

    ஸ்ரீவில்லிபுத்தூர்: நான் என் மாணவிகளை மகள்களாகத்தான் பார்த்தேன். எந்தத் தவறும் நான் செய்யவில்லை என்று கூறியுள்ளார் நிர்மலா தேவி.

    இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டே பெரும் பரபரப்பாகி விட்டது. நிர்மலா தேவி வழக்கம் போல கோர்ட்டுக்கு வந்திருந்தார். நீதிபதி முன்பும் ஆஜரானார்.

    ஆனால் அடுத்தடுத்து 2 முறை மயங்கி விழுந்து பரபரப்பு ஏற்படுத்தி விட்டார். நீதிபதி முன்பு 2 முறை அவர் மயக்கம் போட்டு விழே வெளியே கொண்டு வந்து ஆசுவாசப்படுத்தினர்.

    கோர்ட் வளாகத்தில் சுருண்டு விழுந்த நிர்மலா தேவி.. ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரும் பரபரப்புகோர்ட் வளாகத்தில் சுருண்டு விழுந்த நிர்மலா தேவி.. ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரும் பரபரப்பு

    தண்ணீர் அடித்தனர்

    தண்ணீர் அடித்தனர்

    அவரை நார்மல் நிலைக்குக் கொண்டு வருவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. முகத்தில் தண்ணீர் அடித்துப் பார்த்தனர். கையை உரசி சூடு ஏற்படுத்திப் பார்த்தனர்.

    மூச்சு திணறுவது போல

    மூச்சு திணறுவது போல

    நெஞ்சைத் தடவிக் கொடுத்து இயல்பு நிலைக்குக் கொண்டு வரப் பார்த்தனர். ஆனாலும் மூச்சுத் திணறுவது போல துடித்தார் நிர்மலா தேவி. தலையை அங்குமிங்குமாக அசைத்து துடிதுடித்தார். பின்னர் ஒரு வழியாக அவரை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்தனர்.

    ஆஜர்

    ஆஜர்

    முன்னதாக பேராசிரியர் நிர்மலா தேவி, உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்கள். நீதிபதி பரிமளா குற்றச்சாட்டு வனைவு பதிவு செய்து (CHARGE FRAME ) கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றது ,அவர்களை தவறான பாதைக்கு வழி நடத்த கூட்டு சதி செய்தது உட்பட 8 பிரிவுகளின் கீழ் உள்ள குற்றச்சாட்டை 3 பேரும் செய்தது உண்மையா என மூவரிடமும் கேட்டார்.

     மகளாக பார்த்தேன்

    மகளாக பார்த்தேன்

    அதற்கு 3 பேரும் தாங்கள் இந்த குற்றச்சாட்டை செய்யவில்லை எனவும், இது பொய் வழக்கு எனவும் தெரிவித்தனர். நிர்மலா தேவி கூறுகையில், நான் மாணவிகளை குழந்தையாகத்தான் பார்த்தேன். எந்த தவறும் செய்யவில்லை என நீதிபதியிடம் தெரிவித்தார்.

     மீண்டும் ஒத்திவைப்பு

    மீண்டும் ஒத்திவைப்பு

    இதையடுத்து 3 பேரும் வரும் 23 ஆம் தேதி மீண்டும் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார். இதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் கோர்ட்டிலிருந்து கிளம்பிச் சென்றனர். வழக்கமாக நிர்மலா தேவி அமைதியாக வந்து போவார். இன்று மயக்கம் போட்டு அனைவரையும் பதற வைத்து விட்டார்.

    English summary
    Professor Nirmala Devi has said in the court that She never did any crime against any girl student.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X