விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சாயங்காலம் 5 மணிக்கு மேல .. ஒரு ஆம்பளை போய் நிர்மலா தேவியை அடிச்சிருக்கான்.. வக்கீல் பரபர தகவல்

நிர்மலாதேவியின் வழக்கறிஞர் பகீர் குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஒரு வாரமாக நிர்மலாதேவி எங்கிருந்தார் என்றே தெரியலை - வக்கீல்

    ஸ்ரீவில்லிப்புத்தூர்: "சாயங்காலம் 5 மணிக்கு மேல ஜெயிலை லாக் பண்ணுனதுக்கு அப்பறமா போயி, ஒரு ஆம்பள நிர்மலாதேவியை அடிச்சிருக்கான்" என்று வக்கீல் பசும்பொன் பாண்டியன் பகீர் புகார் தெரிவித்துள்ளார்.

    கல்லூரி மாணவிகளை தவறான வழிக்கு அழைத்து செல்ல முயன்றது சம்பந்தமாக நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். கூட்டு சதி செய்தது உட்பட சில பிரிவுகளில் நிர்மலாதேவி மற்றும் உரதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவ்ர் கருப்பசாமியும் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கில் சிறை சென்ற நிர்மலாதேவி உட்பட 3 பேருமே இப்போது ஜாமீனில் வெளியே வந்தனர். ஆனால், இது சம்பந்தமான விசரணை ஸ்ரீவில்லிப்புத்தூர் கோர்ட்டில் இன்னமும் நடந்து வருகிறது. ஆனால், கோர்ட் வழக்குகளில் நிர்மலாதேவி சரியாக ஆஜராகாமல் இருந்தார்.

    விசாரணை

    விசாரணை

    அவர் மனநல சிகிச்சை எடுத்து வருவதாக அவரது வக்கீல் பசும்பொன் பாண்டியன் தெரிவித்து வந்தார். ஆனால், இந்த காரணத்தை ஏற்றுக் கொள்ளாத கோர்ட், நிர்மலாதேவியின் ஜாமீனை ரத்து செய்து, திரும்பவும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இந்த வழக்கின் விசாரணையையும் இன்றைய தேதிக்கு ஒத்திவைத்தது.

    கொலை மிரட்டல்

    கொலை மிரட்டல்

    முன்னதாக, "கோர்ட்டில் ஆஜரானால் ஆசிட்டை வீசுவோம் என கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்" என்று நிர்மலாதேவி, வக்கீல் பசுபதிபாண்டியனிடம் பேசிய ஆடியோ ஒன்று வெளியான நிலையில், இது சம்பந்தமான தகவல்களை வக்கீல் பசும்பொன் பாண்டியன் ஒரு நாளிதழுக்கு பிரத்யேகமாக பேட்டி தந்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:

    அடிச்சிருக்காங்க

    அடிச்சிருக்காங்க

    "நிர்மலாதேவியை ஜெயிலில் சந்திக்க, 2 பேரை மனு போட செய்தேன்.. ஆனால் யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. வக்கீலுக்குகூட அனுமதி தரவில்லை என்று எனக்கு தகவல் கிடைத்தது. ஜெயிலுக்குள்ளேயே வைத்து நிர்மலாதேவியை அடிச்சிருக்காங்க... சாயங்காலம் 5 மணிக்கு மேல ஜெயிலை லாக் பண்ணுனதுக்கு அப்பறமா போயி, ஒரு ஆம்பள அடிச்சிருக்கான் ஒரு பொம்பளையை!

    மீடியா

    மீடியா

    செய்தியாளர்களை சந்திக்ககூடாது, உன் வக்கீலை மாத்து..ன்னு எல்லாம் பேசியிருக்காங்க. நான் அப்போ இருந்து சொல்லிட்டு வரேன்.. இதில அரசியல் தலையீடு இருக்கு, அமைச்சர் மிரட்டல் இருக்குதுன்னு.. இதை நான் மீடியாகிட்ட சொல்லிடுவேன்னுதான் இப்போ அவங்களுக்கு கலக்கம் வந்துடுச்சு" என்றார்.

    English summary
    someone has attacked nirmaladevi in jail says, lawyer pasumpon pandian
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X