விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோர்ட்டுக்கு லேட்டாக வந்த நிர்மலாதேவி.. காரணம் என்னவா இருக்கும்?

கோர்ட்டுக்கு நிர்மலாதேவி தாமதமாக வந்ததால், வழக்கு ஒத்திவைக்கப்பட்டது

Google Oneindia Tamil News

ஸ்ரீவில்லிப்புத்தூர்: நிர்மலாதேவி கோர்ட்டுக்கு லேட்டாக வந்துவிட்டார். அதனால் அவரது வழக்கின் விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வருடமாக ஜெயிலுக்கும் கோர்ட்டுக்கும் அலையாய் அலைந்தவர் பேராசிரியை நிர்மலாதேவி. ஒவ்வொரு முறை வரும்போதும் அவருடன், போலீசார் கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கில் திரண்டு வருவார்கள். மீடியாவிடம் அவர் பேசிவிடக்கூடாது என்று பொத்தினாற் போலவே கூட்டிட்டு வந்து பொத்தினாற் போலவே அழைத்து சென்றுவிடுவார்கள்.

Nirmaladevi came late to the Srivilliputhur court today

ஜாமீன் கிடைக்காதா என்று ஏங்கி கிடந்த நேரத்தில், கோர்ட் நேரடியாக தலையிட்ட பிறகுதான் நிர்மலாதேவிக்கு ஜாமீன் தரப்பட்டது. இது சம்பந்தமாக வழக்கு விசாரணை இன்னும் நடந்து கொண்டு இருக்கிறது. அதற்காக அடிக்கடி கோர்ட்டுக்கும் வந்து போகிறார்.

 மீண்டும் விரிசல் விழுமா அதிமுகவில்.. ஓங்கும் ஓபிஎஸ் கை.. பெரும் அதிர்ச்சியில் எடப்பாடியார் தரப்பு! மீண்டும் விரிசல் விழுமா அதிமுகவில்.. ஓங்கும் ஓபிஎஸ் கை.. பெரும் அதிர்ச்சியில் எடப்பாடியார் தரப்பு!

கடந்த 13-ந் தேதிகூட ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகளிர் கோர்ட்டில் ஆஜராக வந்திருந்தார் நிர்மலாதேவி. மல்லிப்பூ, காட்டன் புடவை, ஹேண்ட் பேக் என ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு வேற லெவலில் மாறி இருந்தார். அப்போது அவருடன் பேராசிரியர் முருகனும் ஆஜரானார்கள். அந்த வழக்கின் விசாரணை இன்றைய தினம் அதாவது 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி இன்று வழக்கின் விசாரணை கோர்ட்டுக்கு வந்தது. அப்போது, கருப்பசாமி, முருகன் ஆகியோரும் ஆஜரானார்கள். அப்போது நிர்மலா தேவி ஆஜராவதில் விலக்களிக்க கோரி மனு தரப்பட்டது. ஆனால் அந்த சமயத்தில் கோர்ட்டில் நிர்மலாதேவி ஆஜராகவில்லை. அதனால் இந்த வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 13-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

வழக்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், திடீரென கோர்ட்டுக்குள் நுழைந்தார் நிர்மலாதேவி. அவர் எதனால் தாமதமாக வந்தார் என்று தெரியவில்லை என்றாலும், வழக்கு ஒத்தி வைக்கப்பட்ட பிறகு கோர்ட்டுக்கு வந்ததால் விசாரணை எதுவும் நடைபெறவில்லை.

English summary
The trial of the case has been postponed since Nirmaladevi was late for the court
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X