விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் தண்ணீர் பஞ்சமா?... அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பலே பதில்

Google Oneindia Tamil News

விருதுநகர்: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத காரணத்தால் ஊராட்சி செயலாளர்கள் குடிநீர் பிரச்சனையை சரிவர கவனிக்காமல் செயற்க்கையான குடிநீர் பஞ்சத்தை உருவாக்கி அரசு மீது பழி போட நினைக்கிறார்கள் என்று அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் குடிநீர் வழங்கல் பணிகள் குறித்து அனைத்துத்துறை அரசு அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவஞானம் முன்னிலையில், பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ் ஆர் ராஜவர்மன் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் சந்திர பிரபா முத்தையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

No water shortage in Tamil Nadu, Minister Rajendra Balaji answer

விருதுநகர் மாவட்டத்தில் சில பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிளார்க்குகள் தேர்ந்து எடுக்கப்பட்ட பஞ்சயாத்து தலைவர்கள் போல் செயல்பட்டு வருகின்றன. பஞ்சாயத்து கிளார்க்குகள் தங்கள் பணியை ஒழுங்காக செய்யாமல் குடிநீர் பஞ்சம் என கூறி தமிழக அரசு மீது பழி போடுகின்றனர் எனக் குற்றம் சாட்டிய அமைச்சர் கே.டி.இராஜேந்திர பாலாஜி, ஒரு சில இடங்களில் பஞ்சாயத்து செயலாளர்கள் பணி செய்வது இல்லை என்றார்.

மேலும், விருதுநகர் மாவட்டத்தில் மின்மோட்டார் பயன்படுத்தி சில வீடுகளில் குடிநீர் பிடிப்பதால் பல வீடுகளுக்கு சீராக குடிநீர் கிடைப்பதில்லை. முறைகேடாக மின் மோட்டர் பயன்படுத்தி விருதுநகர் மாவட்டத்தில் மின் மோட்டர் பயன்படுத்தி தண்ணீர் திருடும் விடுகளின் மின் மோட்டாரை பறிமுதல் செய்து, அவர்கள் தண்ணீர் இணைப்பை ரத்து செய்து மீண்டும் இணைப்பு வழங்க 15 ஆயிரம் வரை அபாரதம் விதிக்க வேண்டும். இது போன்ற கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் கே.டி.இராஜேந்திர பாலாஜி அறிவுரை வழங்கினார்

மின் மோட்டர் பயன்படுத்தி தண்ணீர் எடுப்பதால் தற்போது நிலவும் தண்ணீர் பஞ்சத்துடன் செயற்கையான தண்ணீர் பஞ்சமும் உருவாகியுள்ளது என விருதுநகரில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

English summary
Minister Rajendra Balaji Said that No water shortage in Tamil Nadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X