ஓபிஎஸ்ஸா? பாஜகவிலா? நிச்சயமாக வரவேற்போம்.. குதூகலமான சீனிவாசன்! ‘அவர்’ வந்தாலும் ஓகே தானாம்!
விருதுநகர் : ஓ.பன்னீர்செல்வம் இணைய வேண்டுமென்று விரும்பினால் தாராளமாக இணையலாம் என பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் கூறியுள்ளார்.
விருதுநகர் பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சீனிவாசன்," பிஜேபியின் அரசியல் நாட்டினுடைய வளர்ச்சி நோக்கி தான் இருக்கிறது. நாடு முழுக்க வளர்ச்சித் திட்டங்கள் எல்லாத் துறைகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
மக்கள் கடல் அலையில் மிதக்கிறேன்! மனம் திறந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்! செந்தில் பாலாஜி ஹேப்பி!
கடந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் 6 டெக்ஸ்டைல் பூங்காக்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே 150 கோடி ரூபாய்க்கு டெக்ஸ்டைல் பூங்கா அமைப்பதற்கு அறிவித்தது.

திமுக அரசியல்
திமுக செய்துவந்த பிஜேபி எதிர்ப்பு அரசியல் காரணமாக தமிழ்நாட்டில் எந்த வளர்ச்சியும் அனுமதிக்கமாட்டோம் என எடுத்ததில் காரியாபட்டியில் டெக்ஸ்டைல் பூங்கா வரக்கூடாது என நிலைப்பாட்டை திமுக எடுத்தது. தற்போது அரசு மாறிவிட்டது. அரசு துறையில் இருந்து அந்த பூங்கா வருவதற்கான எல்லா முடிவுகளும் வந்தபிறகும் வேறு வேறு காரணங்களை கூறி தமிழக அரசாங்கம் காரியாபட்டி பகுதியில் அமைந்துள்ள இந்த டெக்ஸ்டைல் பூங்கா அமைவதற்கு முட்டுக்கட்டை கொடுத்து வருகிறது.

தமிழக அரசு திட்டம்
கடந்த வாரம் கோயமுத்தூர் வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் 150 கோடி ரூபாய் திட்டத்தை நிறைவேற்ற முடியாத தமிழகத்தில் 2,000 கோடி ரூபாய் திட்டத்தை எப்படி நிறைவேற்ற முடியும் என்கின்ற கேள்வியைக் கேட்டு இருப்பதாக கூறினார். தமிழக அரசு உடனடியாக இந்த டெக்ஸ்டைல் பூங்காவை துவங்கி அங்குள்ள மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க வேண்டும்.

பாஜகவில் ஓபிஎஸ்?
ஓ. பன்னீர்செல்வம் பாஜகவில் இணைய விரும்புகிறார்கள் என்ற ஒரு கருத்து இருக்கிறது. ஓ பன்னீர்செல்வம் இணைய வேண்டுமென்று விரும்பினால் தாராளமாக இணையலாம், ஏன் தமிழக முதல்வர் ஸ்டாலின் நினைத்தால் கூட நாங்கள் ஏற்றுக் கொள்வோம்.

திருமாவளவன் மீது புகார்
திருமாவளவன் உடைய ஆடை அலங்காரங்கள் சமூகநீதி தான். அந்த சமூகநீதி ஆடைகள் தற்போது அந்த அலங்காரம் இல்லாமல் போய்விட்டது. பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு திரெளபதி முர்மு நிறுத்தப்பட்டு இருக்கிறார். அந்த வகையிலும் சமூக நீதிக் கொள்கைக்கு உட்பட்டவர், அவர் ஒரு பெண். மேடை எல்லாம் சனாதனம் பற்றி அதிகம் பேசி, இந்து மதத்தை ஒழிப்போம் என்று சொல்லி தற்போது யாருக்கு அவர் ஆதரவு கொடுக்கிறார் என்று பார்க்க வேண்டும். ஏன் இந்த இரட்டை வேடம் திருமாவளவன் போடுகிறார் திருமாவளவன் ஜனதாதனத்தை தவறாகப் பேசி மக்களிடம் அம்பலப்பட்டு நிற்கிறார்" என பேசினார்.