விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழக அரசு உத்தரவிட்டும் ஏன் ஆளுநர் கையெழுத்திட தயங்குகிறார்?.. அற்புதம்மாள் கேள்வி

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழக ஆளுநர் கோப்பில் கையெழுத்திடத் தயங்குவது ஏன்- அற்புதம்மாள் கேள்வி-வீடியோ

    ராஜபாளையம்: தமிழக அரசு பேரறிவாளனை விடுதலை செய்ய உத்தரவிட்டும் கூட தமிழக ஆளுநர் கோப்பில் கையெழுத்திடத் தயங்குவது ஏன் என்று அற்புதம்மாள் கேட்டுள்ளார்.

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தபட்ட 7 பேரை விடுதலை செய்ய கோரி மக்களை சந்திக்கும் கூட்டம் நடைபெற்றது.

    perarivalan s mother s poser to tn governor

    இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், எனது மகன் பேரறிவாளன் 28 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். அவரை விடுதலை செய்ய அரசு அமைச்சரவையை கூட்டி முடிவெடுத்து அனுப்பிய கோப்புகளை அனுப்பி உள்ளது.

    தமிழக அரசு உத்தரவிட்டும் ஏன் ஆளுனர் கையெழுத்திட தயங்குகிறார். அவர் கையெழுத்திட வேண்டும் என மக்களை சந்திக்கிறேன். மக்கள் கருந்து கேட்டு செயல்படுவேன்.

    நீதிமன்ற தீர்ப்பை மதித்து செயல்படும் சாமானிய மக்கள் நாங்கள். நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம். ஆனால் ஆளுநர் நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் இருப்பது ஏன் என்பதுதான் எங்களுடைய கேள்வி.

    ஆகையால் தான் மக்களை சந்தித்து வருகிறோம். அதனடிப்படையில் இன்று ராஜபாளையத்தில் மக்களை சந்தித்து மக்கள் கருத்தை கேட்டு செயல்படுவோம் என கூறினார்

    English summary
    Perarivalan's mother Arputhammal has asked why TN Governor is not signing the release of his son.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X