விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வா வா, மல்லுக்கு வா.. சண்டைக்கு வா.. மோதிப் போர்ப்போம்.. திமுகவுக்கு ராஜேந்திர பாலாஜி சவால்

Google Oneindia Tamil News

Recommended Video

    திமுகவுக்கு ராஜேந்திர பாலாஜி சவால்..வீடியோ

    ஸ்ரீவில்லிபுத்தூர்: நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் திமுகவுடன் மோதிப் பார்க்க நாங்க தயார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பேரறிஞர் அண்ணாவின் 111 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திர பிரபா, ராஜவர்மன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது கூட்டத்தில் சிறப்புரையாற்றிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கம் போல தகிடுமுகிடாக பேசினார்.

    rajendra balaji dares dmk to face admk in by poll

    அவர் பேசியதிலிருந்து சில...

    ஆட்சி மாறப் போகுது, அதிமுக அமைச்சர்கள் எல்லாம் ஜெயிலுக்குப் போகப் போறாங்க என்று திமுககாரங்க சொன்னாங்க. ஆனால் என்ன நடந்துச்சு.. டெல்லியில் மோடி,, தமிழகத்தில் எடப்பாடின்னுதானே ஆச்சு.

    திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் வாபஸ் வாங்கியதற்கு காரணம் நாங்கள் அவர்களை அடித்து வெளுத்து சட்டையை கிழிப்போம், அடிச்சு வெளியே அனுப்புவாங்க என்று தெரிந்து தான் வாபஸ் வாங்கினார்கள்.

    நாங்குநேரி , விக்கிரமாண்டி இடைத்தேர்தலில் திமுக வா வா , மல்லுக்கு வா. சண்டைக்கு வா, மோதிப் போர்ப்போம். அம்மாவின் மரணத்திற்கு காரணமான திமுகவை இருக்கும் இடம் தெரியாமல் அழித்து விடுவோம்.

    rajendra balaji dares dmk to face admk in by poll

    என்னை எங்கு தேர்தல் பணிக்காக போட்டாலும் சரி, திமுகவை விட மாட்டேன். நிறைய வேலை வச்சிருக்கேன். எடப்பாடியார், ஓபிஎஸ் அறிவிக்கும் வேட்பாளர் யாராக இருந்தாலும் அவர்களது வெற்றிக்காக பாடுபடுவேன். விட மாட்டேன்.

    அம்மாவை தனி கோர்ட் அமைத்து சிறையில் அடைக்க காரணமாக இருந்த ப.சிதம்பரம் நீ தோண்டிய படு குழியில் நீயே விழுந்து விட்டாய். ப.சிதம்பரம் வாழ்க்கை இத்தோடு முடிந்து விட்டது. அக்டோபர் இறுதி அல்லது நவம்பரில் உறுதியாக கண்டிப்பாக உள்ளாட்சி தேர்தல் வரப்போகிறது என்று பேசினார் ராஜேந்திர பாலாஜி.

    English summary
    Minister Rajendra Balaji has dared DMK to face ADMK in the Nanguneri and Vikravandi by elections.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X