விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடியை டாடின்னு கூப்பிட்டா என்ன தப்பு.. பாதுகாப்பவர் அப்பாதானே.. அப்ப சரிதானே.. கலக்கும் கேடிஆர்!

மோடியை டாடி என்பதில் தவறில்லை என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    மோடியை டாடின்னு கூப்பிட்டா என்ன தப்பு - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

    விருதுநகர்: "ஏன் மோடியை டாடின்னு கூப்பிட்டா என்ன தப்பு? இந்திரா காந்தியை அன்னைதானே நாம சொல்றோம். நாட்டை பாதுகாப்பவரை தந்தை அதாவது டாடின்னு சொல்றதுல ஒரு தப்பும் இல்லை" என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

    கடந்த 2 இரு தினங்களுக்கு திமுக தலைவர் ஒரு பிரச்சாரத்தில் பேசும்போது, அதிமுகவில் செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகிய 3 கோமாளிகள் இருப்பதாக சொல்லி இருந்தார். ஸ்டாலினின் இந்த விமர்சனம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், விருதுநகரில் பிரச்சாரம் செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வந்திருந்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்த கேள்வியை எழுப்பினார்கள்.

    உன்னை தொட்டு பார்த்தா போதும் ராசா.. ஸ்டாலின் கையை பிடித்து உருகிய பாட்டி!உன்னை தொட்டு பார்த்தா போதும் ராசா.. ஸ்டாலின் கையை பிடித்து உருகிய பாட்டி!

    யார் கோமாளி?

    யார் கோமாளி?

    அதற்கு அமைச்சர் சொன்னதாவது: யார் கோமாளிகள்? கோமாளிகள் இல்லையென்றால் நாடகமே எடுபடாது. தேர்தல் முடியட்டும்.. கோமாளி யார், ஏமாளி யார் என்று தெரியும்.

    பழிவாங்கிட்டார்

    பழிவாங்கிட்டார்

    அதிமுக ஒரு ஜனநாயக கூட்டணி. ஆனா திமுகவோ ஒரு ரவுடி கட்சி. ராதாரவியை எப்படி பழிவாங்குவது என்றே ஸ்டாலின் இருந்தார். அதன்படியே இப்போது சமயம் பார்த்து அவரை பழிவாங்கிவிட்டார். திமுகவில் 3-வது தலை முறையாக ஸ்டாலின் மகன் வந்துவிட்டார். இனி அவங்க வீட்டில் இருக்கும் எல்லாரையும் கொண்டுவந்துவிடுவார். ஆனால் அதிமுகவில் அப்படி இல்லை. உழைப்பவர்களுக்கு மட்டும்தான் பதவி!

    அடாவடி வசூல்

    அடாவடி வசூல்

    ஜெயலலிதா இறந்து போனதற்கு காரணமே இந்த திமுகதான். அவங்க பொய் வழக்கு போடப்போய், அதனால அம்மா நொந்து போய், இறந்துட்டாங்க. திமுக ஆட்சிக் காலத்தில் யாராலும் நிம்மதியா ஒரு தொழிலும் செய்ய முடியாது. ஏன் ஒரு பத்திரம்கூட பதிவு செய்ய முடியாது. அந்த அளவுக்கு அடாவடி வசூல் இருக்கும்" என்றார்.

    அன்னை இந்திரா

    அன்னை இந்திரா

    இதையடுத்து மோடியை டாடி என்று அமைச்சர் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ராஜேந்திர பாலாஜி, "ஏன் டாடின்னு கூப்பிட்டா என்ன தப்பு? இந்திரா காந்தியை அன்னைன்னு தானே நாம சொல்றோம். சி.பா.ஆதித்தனாரை தமிழர் தந்தை என்றுதானே சொல்றோம். அப்படி இருக்கும்போது தேசத்தை பாதுகாப்பவரை தந்தை அதாவது டாடின்னு சொல்றதுல என்ன தப்பு? ஒரு தவறும் இல்லை"என்று விளக்கம் அளித்தார்.

    English summary
    Minister Rajendra Balaji campaigned in Virudhunagar Constitution and he has explained why he saying Modi is our Daddy
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X