விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மக்கள் எங்கள் பக்கம்.. நல்லாட்சி நாயகன் எடப்பாடியாரே வெல்வார்.. ராஜேந்திர பாலாஜி நச்!

Google Oneindia Tamil News

Recommended Video

    மக்கள் எங்கள் பக்கம்.. எடப்பாடியாரே வெல்வார்.. ராஜேந்திர பாலாஜி

    ஸ்ரீவில்லிபுத்தூர்: மக்கள் எங்கள் பக்கம் உள்ளதால் உள்ளாட்சித் தேர்தலில் நல்லாட்சி நாயகன் எடப்பாடி அவர்களுக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் அனைத்து இடங்களில் வெற்றி பெற்று பெறுவோம் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி அளித்துள்ளார்.

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார்.

    rajendra balaji hopes for big victory in local body elections

    601 பயனாளிகளுக்கு சுமார் 2 கோடி மதிப்பிலான இலவச நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா மற்றும் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன், மாவட்ட ஆட்சியர் சிவஞானம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பின்னர் கூட்டத்தில் பேசிய பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஏழை எளியோருக்கு பட்டா கொடுத்தீர்கள் என்றால் உங்கள் பிள்ளை குட்டிகள் நன்றாக இருக்கும் என வட்டாட்சியர்களை வாழ்த்தினார்.

    என்னா புத்திசாலித்தனம்.. சூட்கேஸ் ஹேன்டிலில் மறைத்து தங்கம் கடத்தல்!என்னா புத்திசாலித்தனம்.. சூட்கேஸ் ஹேன்டிலில் மறைத்து தங்கம் கடத்தல்!

    ஏழை எளிய மக்களுக்கு செய்கின்ற உதவி இறைவனுக்கு செய்யும் வழிபாடு என மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தெரிவித்துள்ளார். எந்த மதமாக இருந்தாலும் ஏழைகளுக்கு செய்யும் உதவி இறைவனுக்கும் செய்யும் வழிபாடு என தெரிவித்தார்.

    பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், மக்கள் எங்கள் பக்கம் உள்ளதால் உள்ளாட்சித் தேர்தலில் நல்லாட்சி நாயகன் எடப்பாடி அவர்களின் தலைமைக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறுவோம் என்றும்,விருதுநகர் மாவட்டம் அதிமுகவின் எஃகு கோட்டை என்பதை நிரூபிப்போம் என தெரிவித்தார்.

    English summary
    Minister Rajendra Balaji has expressed his hope of big win in local body elections.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X